சென்னை, செப்.11- நெல்லை மாவட்டம், பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள் ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதி களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “நன்னடத்தை அடிப்படையில் 10 கைதிகளையும் முன் கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதற்கு ஒப்புதல் வழங்ககோரி ஆவணங்கள் தமிழ்நாடு ஆளுநர்ருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், “ஆயுள் தண்டனை கைதி களை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலைசெய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒப்புதல் அளித்தபின்பு தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், அந்த கோப்புகளை எல்லாம் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை ஆளுநர் 8 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறிவழக்கை முடித்துவைத்து உத்தர விட்டனர்.
வந்தே பாரத்தை சுத்தியலால் உடைத்த இளைஞர்! எங்கே?
மும்பை செப்.11 வந்தே பாரத் ரயிலை சுத்தியலால் இளைஞர் ஒருவர் உடைக்கும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும், உடைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் குறித்தும், அடையாளம் தெரியாத நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் இந்த அடையாளம் தெரியாத நபரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து, கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் ஒருவர், ரயில்வே ஊழியர் என்றால் சுத்தியலால் இவ்வளவு வேகமாக உடைக்க வேண்டிய அவசியம் என்ன? அவரின் சீருடை எங்கே? இந்த நிகழ்வு ஏன் காணொலியாக பதிவிடப்பட்டது? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது எங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத்? உடைக்கப்பட்டதா? அல் லது ரயில்வே ஊழியரின் பழுது பார்க்கும் பணியின் போது எடுக்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு ரயில்வே நிர் வாகத்தின் விளக்கத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.