தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து அன்போடு வரவேற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், கரு. அண்ணாமலை உள்ளனர்.
சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கலைஞர் கருணாநிதி நகர் பகுதி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். * தி.மு.க இளைஞரணி சார்பில் நடத்திய பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மகிழனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, ‘‘பகுத்தறிவும் மாணவர்களும்’’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியரின் பகுத்தறிவு உரை கேட்க திரண்டிருந்தோர் (சென்னை – 9.9.2024)