சென்னை, செப்.10 மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் 2024 ஜூலை 19 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுத்தறிவாளர் கழக மாவட்டத்திலும் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்திட வேண்டும் என்ற அறிவிப்பு மாநில பகுத்தறிவாளர் கழகத்தால் அறிவிக்கப்பட்டது.
போட்டியில் பரிசுகளை அந்தந்த மாவட்டங்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் என்றும், பரிசுகளை மாவட்டத்திலுள்ள பெரியாரியல் உணர்வாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டிகளை ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 31 முடிய நடத்திட வேண்டும் என்றும், வெற்றி பெறும் முதல், இரண்டு ,மூன்றாம் மாணவர்களை சென்னையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:
1. பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக்குறி!
2. தேவை பெரியார்
3. பெரியார் காண விரும்பும்
4. சமுதாயம் மண்டை சுரப்பை உலகு தொழும்
5. புரட்சியாளர் பெரியார்
6. பெரியாரால் வாழ்கிறோம்!
7. பெரியார் பிறவாமல் இருந்தால்……..
8. சுய சிந்தனையாளர் பெரியார்
என்கிற எட்டு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
‘விடுதலை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு, தொடர்ந்து மாநில பொறுப்பாளர்களிடம் தலைவர், பொதுச்செயலாளர்கள் தொடர்புகொண்டு போட்டியின் தேவை குறித்து தொடர்ந்து பேசி வந்தனர்.
இப்போட்டிகள் சம்பந்தமான மாநில தலைமைபொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் 28.07.2024 மாலை 6மணிக்கு இணைய வாயிலாக நடைபெற்றது .
இக்காணொலி கூட்டத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமைேயற்றார்.
வருகை தந்தவர்கள் அனைவரையும் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்றார்.
தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி. மோகன் எடுத்துரைத்தார்.
இது தொடர்பான தங்களது கருத்துகளை மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் அண்ணா சரவணன், புதுவை இளவரசி சங்கர், பேராசிரியர் மு.சு.கண்மணி ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இது தொடர்பான இறுதி முடிவுகள் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வனால் அறிவிக்கப்பட்டு, எப்படி இந்த போட்டிகளை நடத்துவது, எவ்வாறு மாவட்டங்களை ஆயத்தப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
ஒவ்வொருவரும் மூன்று மூன்று மாநில பொறுப்பா ளர்களை தொடர்ந்து அணுகி வழியாக மாவட்ட தலைவர் செயலாளர்களை ஊக்கப்படுத்துவது எனவும் முடிவு செய்து அதனை உடனடியாக செயல்படுத்திட தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக பொதுச் செயலாளர் தமிழ் பிரபாகரன் நன்றி கூறினார்
தொடர்ந்து 03.08.2024 அன்று பகுத்தறிவாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி கூட்ட அரங்கில் மாலை 5 மணிக்குக் கூடியது.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். வருகை புரிந்த அனைவரையும் பொதுச்செயலாளர் வி.மோகன் வரவேற்றார். திராவிடர் கழக தொழில்நுட்பக் குழுவினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக பொறுப்பா ளர்கள் சுமார் 40 பேர் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்தில் மாநில அளவில் நடக்கும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசான ரூபாய் 10 ஆயிரத்தை மன்னார்குடி பகுத்தறிவாளர் கழகம் வழங்கும் என்ற அறிவிப்பை மன்னார்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.
கீழ்க்கண்ட மாவட்டங்களின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர், சேலம், புதுச்சேரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், ஆத்தூர், திருவாரூர், விருதுநகர், செங்கல்பட்டு, கடலூர், திருவொற்றியூர், தஞ்சாவூர், திருவள்ளூர், அறந்தாங்கி, இராமநாதபுரம், திருச்சி, கும்பகோணம், வடசென்னை, ஆவடி, தருமபுரி, மன்னார்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், மேட்டூர், கோபி, அரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி,
மதுரை, கிருட்டினகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.
சில மாவட்டங்களில் கல்லூரி தேர்வுகளால் போட்டி நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்ய வேண்டி மாவட்ட பொறுப்பாளர்களை அணுகி உரிய அனுமதியுடன் போட்டி நாள்களில் மாற்றம் செய்துகொண்டனர்.
மாவட்ட அளவில் போட்டி நடத்தப்பட்டு அதன் முடிவுகளை தலைமைக்கு அளித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் போட்டி முடிவுகள் பெறப்பட்டதில் மாணவிகளே அதிகம் பேர் கலந்துகொண்டதும் வெற்றி பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அந்தந்த மாவட்டங்களில் பரிசுகள் ரூபாய் 3000, 2000, 1000 எனவும் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. பிஸ்கட், தேநீர், மதிய உணவு, மாலையில் தேநீர் அவர்களுக்கு வழங்கப்பட்டது .
கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மூன்று பரிசுகளைத் தவிர பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு ஆறுதல் பரிசுகளாக பார்வையாளர்களலே தங்கள் சொந்த பணத்தை தானாகவே விரும்பி பரிசாக அளித்து மகிழ்ந்தனர்.
மாநில அளவிலான போட்டி 07.09.2024 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்களை மாநில அளவிலான போட்டிக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுகோள் வைக்கபட்டதன்பேரில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெற்றி பெற்றவர்கள் அனுப்பி வைக்கபட்டிருந்தனர்.
அதிகாலை 4 மணிக்கே பெரியார் திடலுக்கு வந்துவிட்ட மாணவர்களை பெரியார் திடல் மேலாளர் சீத்தாராமன் அவர்கள் போட்டிக்குத் தயாராவதற்கு தக்க வகையில் அறைகளை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
காலை 9 மணிக்கே பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் மாணவ- மாணவிகளை வரவேற்று அமர வைத்து பதிவு களை செய்யத்தொடங்கினார்கள்.
9.45 மணிக்கு அரங்கம் நிரம்பி வழிய வட சென்னை இராமு, ஆவடி கார்த்திகேயன், வடசென்னை கோபால் போன்ற தோழர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமான இருக்கைகளை சரி செய்து கொடுத்தனர். கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்பாடுகளை கவனித்தார்.
பத்து மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறி விக்கப்பட்டது .
போட்டிக்கான நடுவர்களாக, தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியை சுலோச்சனா அவர்களும், பேராசிரியர் ராஜசேகர் அவர்களும், பேராசிரியர் மஞ்சுளா அவர்களும் நடுவர்களாக பொறுப்பேற்றார்கள்.
போட்டிக்கான அதே தலைப்புகள் வழங்கப்பட்டது.
போட்டியாளர்களுக்கான போட்டி நேரம் 5 நிமிடங்கள்.
வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு
முதல் பரிசு ரூபாய் 10,000 மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும், இரண்டாம் பரிசு ரூபாய் 7500 பேராசிரியர் நன்னனும், அவர்களது மகள் வேண்மாள் நன்னனும், மூன்றாம் பரிசான ரூபாய் 5000 பகுத்தறிவு கலை இலக்கியத்துறை செயலாளர் மாரி கருணாநிதியும் வழங்குவதை அறிவித்தார்கள்.
தொடர்ந்து போட்டி முழுவதும் OTT–யில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளி யிடப்பட்டது
தொடக்க விழாவிற்கு பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். வருகை தந்திருக்கிற அனைவரையும் பொதுச்செயலாளர் வி.மோகன் வரவேற்றார்.
தொடங்கி வைக்க உள்ள மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர், இந்நாள் திராவி டர் கழகத்தினுடைய பொருளாளர் வீ.குமரேசனும், நடுவர்களாக பொறுப்பேற்று இருக்கிற பேராசிரியர் பெருமக்களையும், வருகை புரிந்து இருக்கிற பகுத்தறிவாளர் கழகத்தினுடைய பொறுப்பாளர்களையும், போட்டியில் பங்கேற்க உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளையும் வருகை புரிந்த துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியாரையும், OTT பதிவுக் குழுவினரையும், வந்திருக்கிற பெற்றோர்களையும் வரவேற்று, இப்போட்டியில் போட்டி என்பதைவிட இங்கு பேசுவதுதான் முக்கியமே தவிர, பரிசுகள் அவ்வளவு முக்கியமல்ல என்பதையும், ஏற்கெனவே நீங்கள் பரிசுகள் பெற்றவர்கள் என்பதால், சிறப்பு பெற்றவர்கள் என்பதையும், இம்மேடையில் பேசுவதுதான் உங்களுக்குப் பரிசு என்பதையும், 64 பேர் பங்கேற்றாலும் பரிசுகள் மூன்று பேருக்கு மட்டுமே வழங்குவதால், மற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்ல, என்பதையும் குறிப்பிட்டு வரவேற்று உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன்
தொடர்ந்து தலைமை உரையாற்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், போட்டிக்கான நடுவர்களாக தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியை சுலோச்சனா, பேராசிரியர் ராஜசேகர், பேராசிரியர் மஞ்சுளா ஆகியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறி, எப்படிப்பட்டவர்கள் உங்களை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதும், நீங்கள் எப்படிப்பட்டவர்கள் முன்னால் பேசப் போகிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டு, இதுவே உங்களுக்கு சிறப்பு என்பதை எடுத்துச் சொல்லி, வந்திருக்கின்ற கழகத்தி னுடைய பொருளாளர் வீ. குமரேசனைப்பற்றி குறிப்பிட்டு அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன்
தொடர்ந்து போட்டியை தொடங்கி வைத்த திராவிடர் கழகத்தினுடைய பொருளாளர் வீ.குமரேசன், போட்டி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி இப்போட்டியில் வெற்றி என்பது எல்லோருக்குமே சொந்தம் என்றும், ஆனால் இவர்களால் சிலருக்கு மட்டுமே தான் பரிசுகள் வழங்கப்பட முடியும் என்பதையும் எடுத்துச் சொன்னார் . போட்டியில் பங்கேற்பது அதுவும் இந்த மேடையில் நீங்கள் அங்கீகரிக்கப்படுவது மிகப்பெரிய பரிசு.
பெரியாரியல் என்பது என்ன, பெரியார் தத்துவம் ஒரு அறிவியல் தத்துவம், மிக எளிது, பின்பற்றுவது அறிவுபூர்வமானது, அறிவியல்பூர்வமானது என்பதை எடுத்துக்கூறி, பெரியாரை படியுங்கள்… பின்பற்றுங்கள்…. அது ஒரு வாழ்வில் முறை… எனக் கூறி தன்னுடைய வாழ்த்துக்களோடு தொடங்கி வைத்தார் .
போட்டியாளர்கள் பதிவு செய்த வரிசைப்படி அமர வைக்கப்பட்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வருக்கும் அய்ந்து நிமிடம் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக உரையாற்ற தொடங்கினர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்!
முதலில் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த புவனேஸ்வரன், கே சி எஸ் காசிநாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னையைச் சேர்ந்த சு.பியூலா, விருதுநகர் சாத்தூர் பிஎஸ்என்எல் கல்வியல் கல்லூரி சார்ந்த கார்த்தி குமார், மதுரவாயல் நெடுஞ்சாலை சிந்திக் கல்லூரியைச் சேர்ந்த வி. பிரியதர்ஷினி ,சென்னை ராணி மேரி கல்லூரி ம.புவனேஸ்வரி , ஈரோடு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி இரா. தயாநிதி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பா.ஹரிகரன், சேலம் சிறீ சாரதா மகளிர் கல்லூரி ப. காயத்ரி, சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி பி.ராஜசிறீ, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியல் கல்லூரி எஸ்.சுபாஷினி, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி டி. ஜெயசிறீ ,சேலம் சோனா பொறியியல் கல்லூரி சேலம் சு.வி சிறீலேகா, அரியலூர் தத்தனூர், மீனாட்சி ராமசாமி கல்லூரி அ. அஸ்வினி, மேல்விஷாரம் சி அப்துல் ஹக்கீம் கல்லூரி வே தமிழ் குமரன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொறியியல் மாணவர் மு.ராமமூர்த்தி, ஆவடி புனித பீட்டர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆஃபரின் பானு இப்ராஹிம், செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரி தி.திவ்யபாரதி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவி மு.சண்முகவள்ளி, திருப்பத்தூர் திருமால் கல்வியல் கல்லூரி ஆர்.காயத்ரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ச.சுபநிதி சுப்பிரமணி , கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி சே. கார்த்தி, கடலூர் புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரி ச.பெஸ்டன் இஸ்ரேல், சென்னை, திருவல்லிக்கேணி காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி சி.விசித்ரா, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வெ.மோகனப்பிரியா, அரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி கோ. இணையகவி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செய்யாறு கோ.சரண்குமார், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி செய்யாறு மு. தனலட்சுமி, ஆத்தூர் தலைவாசல் பாரதியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சு.பூஜா, எடப்பாடி சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரா. மேனகா, ஆத்தூர் மாவட்டம் பாவேந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ச.கவுசல்யா, கோவை கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி ரா. பூரணா, அறந்தாங்கி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆலங்குடி க.பர்வதவர்த்தினி, ராமநாதபுரம் மாவட்டம் அன்னை கொலஸ்டிக்கா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மி.மைக்கேல் ஆன்சி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எஸ்.ஆகாஷ், அன்னை கொலஸ்டிக்கா கலை மற்றும் அறி வியல் கல்லூரி சு.சகாய மெர்சி, கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரி ஜே பிரீத்தி, மேட்டூர் மாவட்ட எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சி. ஹரிஹரன், ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி கண்டாரக் கோட்டை புலவனூர் கடலூர் மாவட்டம் ஆர். பர்வீன் பானு, ஆவடி புனித பீட்டர் பொறியியல் கல்லூரி ரா.வர்ஷா, திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி வே அறிவழகன், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி ச.நாகராஜ், அரசு கலைக்கல்லூரி தருமபுரி முத்தமிழரசன், தருமபுரி காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சே.ஆனந்தஷைனி, இம்மானுவேல் அரசர் கல்வியியல் கல்லூரி, நட்டாளம் ரா.மோனிஷா, அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி குடி யேற்றம் கோ.சாதனா, அரசு சட்டக் கல்லூரி திருச்சி அ.அருணா, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி கிருஷ்ணகிரி மு. சந்தோஷ்குமார், அரசு கலைக் கல்லூரி திருச்சி சு.வைர வளவன், அரசு மகளிர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரி டி.நிரோஷா தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மு.காவியா, அரசர் கல்லூரி திருவையாறு ச.பிரபாகரன், அரசு கலைக் கல்லூரி அரியலூர் ரா. கலைவாணன், ம.இரா.அரசினர் கலைக் கல்லூரி ஜே.பூந்த ளிர் திருவாரூர், மன்னார்குடி பான் செக்கர்ஸ் கலை அறிவியல் கல்லூரி சி.கிருபா, விவேகானந்தா விஷன் கலை அறிவியல் கல்லூரி , கச்சூர் ர.சாத்ராக், ஆர்கே நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சி.லட்சுமணா, மன்னார்குடி செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி கலைவாணி, தேவகோட்டை ஆனந்தா கல்லூரி சே.ராபின்சன், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி ஆ.ஷர்மிளா, புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி ஞா.சிவசிறீ, அதாகி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, புதுச்சேரி ச. சமீரா பர்வீன், அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, புதுச்சேரி அ. ஆயிஷா ஷபானா, சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி அ.அபிபெல்வியா, கிருஷ்ணகிரி செயின் ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி பெ.ஆஷிகா ஆகிய 64 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அனைவருக்கும் 11.15 மணிக்கு தேனீரும், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.
காலை 11.30 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இணையர் மோகனா வீரமணி அரங்கிற்கு வந்த அமர்ந்து நிகழ்வை பார்வையிட்டார். ஒரு மணி நேரம் அமர்ந்து மாணவர்களின் ஆற்றலை கண்டு வியந்து போனார்.
தமிழர் தலைவர் ஆசிரியர்
தொடர்ந்து நண்பகல் 1.15 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அரங்கில் அமர்ந்து மாணவர்களின் உரைகளை உற்று நோக்கினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரி மாணவி பெரியாரைப் பற்றி பேசியதும், ஒரு பாடலைப்படியதும் அனைவரையும் கவர்ந்தது. மிகுந்த மகிழ்வுடன் உணவு இடைவெளிக்கு முன் ஆசிரியர் மாண வர்களுக்கு வாழ்வியல் உரையாற்றினார்கள்.
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் . பெரியார் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை சுவைபட எடுத்துக் கூறினார்கள்.
தொடர்ந்து உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. போட்டியில் இன்னும் பேசாதவர்களுக்கும், நடுவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேசியவர்கள், பெற்றோர்கள், மற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இரண்டு முப்பது மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கி 5 மணி யளவில் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுடைய உரையை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கழகத் தலைவர் கி.தளபதிராஜ் அவர்களோடு வருகை தந்த கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மாணவர்களின் ஆற்றலை வியந்து பாராட்டி போற்றி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்
மாணவர்களுடைய பின்னூட்டம் கேட்கப்பட்டது. ஒரு மாணவி தன் வீட்டில் நடக்கும் மூடநம்பிக்கையை பற்றி இப்போது தெளிவாக புரிந்து கொண்டதாகக் கூறினார். அடுத்து மூன்று மாணவர்கள் தங்களுடைய பின்னூட்டத்தை வழங்கினார். பின்னூட்டம் வழங்கிய மாணவர்கள் யாருக்கு பரிசு கிைடத்தாலும் எங்களுக்குக் கிைடத்ததாகவே கருதுகிறோம் என்று கூறினார்கள்.
தொடர்ந்து நடுவர்களுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பினார்கள்.
தொடர்ந்து நடுவர்கள் போட்டியாளர்கள் மீதான தங்களது பார்வையை பதிவு செய்தார்கள். போட்டியில் செய்ய வேண்டியதும், செய்ய தவறியதும் பற்றி கூறினார்கள். அனைத்து மாணவர்கள் சிறப்பையும் எடுத்துக்கூறி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
அவர்களுக்கு திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பொன்னாடையும், நூல்களையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு
ரொக்கம் – சான்றிதழ்!
அடுத்து வெற்றி பெற்றவர்களை பேராசிரியை சுலோச்சனா அறிவித்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
சென்னை ராணி மேரி கல்லூரி முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி மா.புவனேஸ்வரி மூன்றாம் இடத்தைப் பிடித்து ரூபாய் 5000–மும், சான்றிதழும் பெற்றார்.
சேலம் சிறீசாரதா மகளிர் கல்லூரி முதுகலை கணக்கு மாணவி பா.காயத்ரி இரண்டாம் இடம் பெற்று, ரூபாய் 7500–மும், சான்றிதழும் பெற்றார்.
தருமபுரி, காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர்
சே.ஆனந்த சைனி முதலிடம் பெற்று, ரூபாய் 10,000 மற்றும் சான்றிதழைப் பெற்றார்.
அனைத்து போட்டியாளர்களுக்கும் தொடர்ந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில், தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர் மு.இரா. மாணிக்கம், சேலம் வீரமணிராஜூ, சேலம் வழக்குரைஞர் சுரேஷ், திருப்பூர் மு.கிருட்டினவேணி, வடசென்னை கோபால், சண்முகநாதன்,ஆவடி கார்த்திகேயன், வடசென்னை ராமு, ஆத்தூர் மாயக்கண்ணன், ஆத்தூர் முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புற பணியாற்றினர்.
உணவு, விருந்தினர் வரவேற்றல் என அனைத்துப் பணிகளையும் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் திடல் வழக்குரைஞர் சுரேஷ், கலைமணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். OTT யில் பதிவு செய்வதை உடுமலை வடிவேல் குழுவினர் கவனித்துக்கொண்டனர்.
பரிசுகளைத் தவிர இதர உணவு மற்றும் குடிநீர், தேனீர், பிஸ்கட் ஆகியவற்றுக்கு பேரா.சுலோச்சனா, தென்சென்னை மு.ரா.மாணிக்கம், வேண்மாள் நன்னன், தாம்பரம் ந.கரிகாலன், கொடுங்கையூர் தனலெட்சுமி தங்கமணி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் இரா.தமிழ்ச்செல்வன், வி.மோகன், ஆ.வெங்கடேசன், வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று குறையின்றி செய்து முடித்தனர்.
மாவட்ட அளவில் 32 மாவட்டங்களில் பங்கேற்றவர்கள் விவரம்:
மாணவர்கள் 271 பேர். மாணவிகள் 656 பேர் மொத்தம் 927 பேர்.
மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றவர்கள் விவரம்:
மாணவர்கள் 22 பேர். மாணவிகள் 42 பேர் மொத்தம் 64 பேர்.
நிறைவாக பொதுச்செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் நன்றி கூறிட, நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.