தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகர இளைஞரணி செயலாளர் கடகத்தூர் முஅர்ச்சுனன் அவர்களின் தந்தையார் முனுசாமி (வயது 82) அவர்கள் உடல்நலக்குறைவால் கடகத்தூர் அவரின் இல்லத்தில் நேற்று (9/9/2024) காலை 7:40 மணிக்கு மறைவுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத்தின் சார்பில் மதியம் 2 மணிக்கு மறைவுற்ற அய்யா அவர்களுக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் அவர்கள் தலைமையில்… தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் அவர்களால் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தகடூர்.தமிழ்செல்வி மாநில மகளிரணி செயலாளர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், சிசுபாலன் தி.க மாவட்ட விவசாய அணி தலைவர், பெ.மாணிக்கம் தி.க மாவட்ட தொழிலாளரணி தலைவர், த.மு யாழ் திலீபன் அரூர் மாவட்ட திராவிடர் கழகம் இளைஞரணி தலைவர், க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், வீ.சிவாஜி, மா.சுதா விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கலந்துக் கொண்டார்.