பென்னாகரம், செப். 10- தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் கடமடை மு.சங்கரனின் தந்தையார் பெ.முனி என்கின்ற முனுசாமி இயற்கை எய்தினார். அவரது உடல் கடமடை பெரியார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி தலைமையில், மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் க.கதிர், மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக தலைவர் செந்தில்குமார், மேனாள் மாவட்ட தலைவர் இளைய மாதன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் சின்னராசு, தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சிசுபாலன், ப.க மாவட்ட துணை தலைவர் ஏ.ஆர்.குமார், பென்னாகரம் ஒன்றிய ப.க செயலாளர் மு.கோவிந்தராஜ், கழக ஒன்றிய தலைவர் அழகேசன், அகிலன் திருப்பூர், மு.பரமசிவம், தேவேந்திரன் தின்னூர், அக்ரஹாரம் ராமசாமி, நஞ்சப்பன், மாதையன், ராஜா காமலாபுரம், மற்றும் உறவினர்கள், அனைத்துக் கட்சி தோழர்களுடன் இணைந்து உடலுக்கு மாவட்ட கழக தலைவர் கு.சரவணன் மலர் வளையம் வைத்தார்.
மாவட்ட ப.க மாவட்ட செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி வீரவணக்கம் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. எவ்வித மூட சடங்குகளும் இன்றி பெண்களால் மருமகள்கள் பேத்தி சுமதி தமிழ்மணி தீபிகா ஆகியோர் இடுகாடு வரை சுமந்து சென்று எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இலட்சுமணன் தி.மு.க மேனாள் ஒன்றிய செயலாளர், சி.பி.எம் சக்கரவேல், மேனாள் கவுன்சிலர், நடத்துநர் நாகராஜன், மற்றும் குடும்பத்தினர் நாகராணி கலா மணி முனிராஜ் திம்மராயன் செவ்வந்தி கலைச்செல்வன் கலைவாணன் ஆகியோர் பலர் இறுதி நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.