காஞ்சிபுரம், செப். 10- காஞ்சி புரம் மாவட்டம் மானாம்பதி, அண்ணா திடலில் 31.8.2024 அன்று மாலை 6.00 மணியளவில், திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் மானாம்பதி லோ. மணிவண்ணன் அவர்கள் கூட்டம் நடத்த உறுதுணையாக இருந்து அனைவரையும் வரவேற்று சிறப்பாக உரை யாற்றினார்.
மாவட்ட கழகச் செயலா ளர் கி. இளையவேள் கூட்டத் திற்கு தலைமை வகித்து உரை யாற்றினார்.
கூட்டத்தின் நோக்கம் குறித்தும் ஆசிரியரின் கட்டளை குறித்தும் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் பு. எல்லப் பன் தொடக்க உரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை சுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆ. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அ. ரேவதி, பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சின்னதுரை, அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராஜன், தமிழ் உரிமை கூட்டமைப்பின் பொறுப்பாளர் காஞ்சி அமுதன், சமூக நீதி சமூக செயற்பாட்டாளர் பெருமாள் குமாரசாமி, ரவிபாரதி, தன்னாட்சி தமிழகப் பொறுப்பாளர் த. பழனி, பகுத்தறிவுப் பாடகர் காஞ்சி உலக ஒளி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளரும் கழகச் சொற்பொழிவாளருமான முனைவர் காஞ்சி பா. கதிரவன், மாநில மகளிர் பாசறை செயலாளரும் வழக்குரைஞருமான பா. மணியம்மை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு குறித்த செய்தி களையும் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, அரசியல் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், மனித நேயத்தை வளர்த்தல், சமூக சீர்திருத்தம், ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தல் முதலிய செய்திகள் குறித்தும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், பெரியாரை உலகமயமாக்கும் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினர்.
கூட்டத்தில், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் குமரன், தன்னாட்சிக் கழகத்தின் த. பழனி, தோழர் அருண்குமார் உள்ளிட்ட தோழர்களும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டம் சிறப்பாக நடை பெறுவதற்கு சுந்தர்ராஜன், தோழர் தாண்டவமூர்த்தி, அண்ணா தொழிற்சங்கத் தோழர் அழகேசன் முதலிய தோழர்கள் மிகுந்த ஒத்துழைப்பை நல்கினர்.
காஞ்சிபுரம் மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
லோ. மணிவண்ணன் குடும்பத்தினர் கனிவுடன் அனைவருக்கும் இரவு உணவு வழங்கி மகிழ்ந்தனர். மானாம்பதி பகுதியில் கழகக் கூட்டம் நல்ல எழுச்சியை உண்டாக்கியது.