சென்னை, செப். 9- தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த உரிமைத்தொகையை சுமார் 1கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில், மகளிர் உரி மைத்தொகைக்கான நிபந்தனை களை தளர்த்தி, மேனாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், மேனாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இணைக்கப்படு வார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை வருகிற 14ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செவ்வாய்க் கோளுக்கு
2 ஆண்டுகளில் ஆளில்லா விமானம்
வாசிங்டன், செப். 9- உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரும் எக்ஸ் வலைத்தளம், தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லைனர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலைவரானவர் எலான் மஸ்க். மனிதர்களை செவ்வாய்க் கோளுக்கு குடியேற்றுவது இவருடைய கனவு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் மூலம் சக்தி வாய்ந்த விமானங்களை உருவாக்கி வருகிறார். இந்தநிலையில் செவ்வாய்க் கோளுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் ஆளில்லா விமானத்தை அனுப்ப உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறு கையில், “இன்னும் 2 ஆண்டுகளில் செவ் வாய் கோளில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில் ஸ்டார்ஷிப்கள் என்னும் ஆளில்லா விமானங்கள் அனுப்படும். சோதனை வெற்றி அடைந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களுடன் விமானங்கள் அனுப்பப்படும்” என்றார்.