சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் “மானமிகு சுயமரியாதைக்காரர்” டாக்டர் கலைஞர் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அமைத்திருக்கும் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, மானமிகு சுயமரியாதைகாரன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய கலைஞருக்கு வீர வணக்கம். அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் இயற்றி சமூகநீதி காத்த கலைஞருக்கு வீர வணக்கம், தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் அண்ணாவுக்கு அடுத்த மாணாக்கராகப் பெரியார் கொள்கைகளைச் செயல்படுத்திய கலைஞருக்கு வீர வணக்கம் என ஒலி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து கழகத் தோழர்களும் வீர வணக்கம், வீர வணக்கம் என ஒலி முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் பொன்னேரி பன்னீர்செல்வம், தே.செ. கோபால், திராவிட தொழிலாளர் கழக மாநில செயலாளர் திருச்சி சேகர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், சோ. சுரேஷ், மு. சண்முகப்பிரியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும்பாக்கம் தாமோதரன், பி.டி. இராஜேந்திரன், வழக் குரைஞர் த. வீரன், வழக்குரைஞர் வேலவன், கமலேஷ், ஆனந்த், கடலூர் வழக்குரைஞர் கனகசபாபதி, பெரியார் யுவராஜ்.
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச் செல்வன், காப்பாளர்கள் கி. இராமலிங்கம், தி.செ. கணேசன், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன், க. கலைமணி, வழக்குரைஞர் உதய பிரகாஷ், திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே. ஒளிவண்ணன், பெரியார் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் க.செல்லப்பன், ஏ. இராம்குமார்.தாம்பரம் மாவட்ட கழகத் தோழர்கள் சு. மோகன்ராஜ், பழனிச்சாமி சீர்காழி கு.நா. இராமண்ணா, பெரியார் களம் இறைவி, ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் ச. தமிழ்ச் செல்வன், அண்ணாநகர் பழ. சேரலாதன், பகுத்தறிவாளர் கழக சுந்தர்ராஜன், இரணியன் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.