சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 1 லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய குடும்ப அட்டை கோரி 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் முதல் கட்டமாக 92 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை சுமார் 80ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இதனிடையே 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 1 லட்சம் பேருக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் சரிபார்க்கும் பணி முடிந்து அட்டைகள் வழங்கப்படும் உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.