வெட்டிக்காடு, செப். 9- திருவோணம் ஒன்றியம் – குறுவட்ட அளவிலான போட்டிகள் கடந்த மாதம் 4.8.2024 முதல் 4.9.2024 வரை நடைபெற்றது. குறுவட்ட அளவிலான போட்டிகளில் பெரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையான குழு மற்றம் தனித்திறன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று ஏறக்குறைய 17 பரிசுகளைப் பெற்றுள்ளனர். மேலும் எட்டு வகையான மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
14 வயதிற்கு உள்பட்டவர்கள் போட்டியில் கைப்பந்து குழு – முதலிடம், எறிபந்து குழு – இரண்டாமிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உள்பட்டவர்கள் போட்டியில் குண்டு எறிதல் – தனித்திறன் – மாணவிகள் – முதலிடம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் – மாணவிகள் – இரண்டா மிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
17 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டியில் குண்டு எறிதல் மாணவிகள் – இரண்டாம் இடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டியில் குண்டு எறிதல் – தனித்திறன் – மாணவர்கள் – மூன்றாமிடம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் – மாணவர்கள் – மூன்றாமிடம், 100 மீட்டர் தடகள ஓட்டப் போட்டி – மாணவர்கள் – மூன்றாமிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டியில் உயரம் தாண்டுதல் – தனித்திறன் – மாணவர்-மாணவி, முதல் இரண்டு இடங்கள் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட் டியில் உயரம் மும்முறை தாண்டுதல் – மாணவ-மாணவிகள் – முதலிடம், தடை தாண்டும் போட்டி – மாணவ-மாணவிகள் – இரண்டாமிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட் டியில் வளைகோள் பந்து மாணவிகள் – முதலிடம் மாணவர்களுக்கான இருவர் மற்றும் ஒருவர் – இரண்டாமிடம், மாணவிகளுக்கான தனிப்போட்டி – இரண்டாமிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டி யில் பூப்பந்தாட்டம் – மாணவர்கள் – இரண்டாமிடம், பூப்பந்தாட்டம் – மாணவிகள் – இரண்டாமிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டி யில் கபடிப் போட்டி – மாணவிகள் – இரண்டாமிடம் – மாவட்ட அளவில் தேர்ச்சி.
இறுதி
2024-2025ஆம் கல்வியாண்டில் நடந்த குறுவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் பெரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் மட்டுமே அதிக பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது.