தடையைமீறி டிராக்டரில் பிள்ளையார் சிலை ஊர்வலம்!
டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி!
தேனி, செப்.9 தேனியில் ‘பிள்ளையார் சதுர்த்தி’ சிலை ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
‘பிள்ளையார் சதுர்த்தி’ விழா வையொட்டி ஹிந்து அமைப்பினர் ஆங்காங்கே பெரிய அளவிலான பிள்ளையார் சிலைகளை வைத் துள்ளனர். இவ்வாறு சிலைகளை வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் சமூக விரோ திகளைக் கையில் போட்டு கொண்ட ஹிந்து அமைப்பினர் மக்களை மிரட்டி சிலைகளை வைத்தனர்.
தேனியில் நடந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவின் போது டிராக்டரில் வைத்து சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அவ்வகையில் ஒரு டிராக்ட ரில் ஏறி சிறுவர்கள்களும் மேலும் சிலரும் சென்று கொண் டிருந்தனர். அப்போது எதிர் பாராதவித மாக டிராக்டர் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது.
இதில் 3 சிறுவர்கள் உயிரி ழந்தனர். மேலும் இருவர் படு காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விதிமுறைகளை மீறி சரியான பாதுகாப்பில்லாமல் பெரிய பெரிய பிள்ளையார் சிலைகளை ஹிந்து அமைப்பினர் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இருப்பி னும் காவல்துறையினரின் தடை யையும்மீறி இவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்படிச்சென்ற ஊர்வலத்தின் போது நடந்த விபத்தில் தான் 3 சிறுவர்களின் உயிரிழப்பு நடந்த துள்ளது.