காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள் தம் குடும்பத்தின் சார்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் ‘‘வளர் தமிழ் நூலகம்’’ என்ற பெயரில் கட்டிவரும் நூலகத்திற்கு அவரது வேண்டுகோளை ஏற்று, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 1,054 புத்தகங்களை, அதன் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கியுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னை பெரியார் திடலுக்கு நேற்று (08.09.2024) மாலை 5.30 மணியளவில் மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வருகை தந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு இயக்க நூல்களை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். நூலகத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் மகிழ்ச்சியுடன் அரை மணிநேரம் உரையாடிவிட்டு விடைபெற்றுச் சென்றார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.