தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.