நாகர்கோவில், செப்.8- பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். கல்லூரி பேராசிரியர் மலர் ரத்னா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். முதல்பரிசு ஜியாபின் இரண்டாம் பரிசு நர்மதா மூன்றாம் பரிசு ரேஷ்மா பெற்றனர். அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழக செயலாளர் எம். பெரியார் தாஸ் நன்றி கூறினார்.