ஈரோடு, செப். 8- ஆசிரியர் நாளன்று .(5/9/2024) நண்பகல் 12.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெ. மேட் டுப்பாளையம் அரசு ஆரம் பப்பள்ளி. தெற்கு பள்ளிக்கு திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் அ.பாட்டுச்சாமி – மல்லிகாகுடும்பத்தின் சார்பாக ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி அமைத்து (சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளைவை) பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டது.
தொடக்க விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், பெ. மேட்டுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி குமாரசாமி, திராவிட முன்னேற்றக் கழக பேரூர் கழகச் செயலாளர் குமாரசாமி, திராவிடர் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பவானி ஒன்றிய செயலாளர் சோ. வீரக்குமரன், திராவிடர் கழக கோபி மாவட்ட காப்பாளர் சிவலிங்கம், திராவிடர் கழக கோபி மாவட்ட செயலாளர் குணசேகரன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், கவுந்தி பாலன், மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், SMC பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.