நெல்லை, செப்.8 உலக விண்வெளி வாரத்தை யொட்டி நடைபெறும் போட்டிக்கான கட்டுரைகளை இம் மாதம் 20ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்தும வளாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்ரோ உந்தும வளாகம் சாா்பில் அக்டோபா் 4 முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் விண்வெளி ஆய்வு நம் உலகை எப்படி மாற்றியுள்ளது என்ற தலைப்பிலும், 10ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்கள் காலநிலை மாற்றத்தை எதிா்ப்பதில் விண்வெளி நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும்.
கட்டுரைகளை இம் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் சிறப்பிடம் பெறும் கட்டுரைகளுக்கான பரிசுகள் அக்டோபா் 10 ஆம் தேதி வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அறிய 04637-281940, 9486041737, 9994239306 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.