திண்டுக்கல், செப்.8 திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் அனுமதி யின்றி ஊர்வலமாக எடுத்துச் சென்ற விநாயகர் சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர் 17 பெண்கள் உட்பட 37 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் குடைப் பாறைப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வர சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடைப்பாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் இந்து முன்னணி சார்பில் 3 அடி உயர விநாயகர் சிலை தடையை மீறி வைக்கப்பட்டது.
நேற்று (7.9.2024) காலை முதலே அப்பகுதியில் 50 க்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விநா யகர் சிலைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டது.
இதன்பின் விநாயகர் சிலையை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேளம், தாளங்களுடன் சென்ற சிலையை வத்தலக்குண்டு சாலையை நெருங்கிய போது காவல்துறையினர் மறித்து பறிமுதல் செய்தனர்.
ஊர்வலமாக வந்த 17 பெண் கள் உள்பட, 37 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலை திண்டுக்கல் கோட்டை குளத்தில் வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் குளத்தில் போடப்பட்டது.