பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
(திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி – பெண் யானை; உருவுமை கொள – உருவத்தை பார்வதியார் கொள்ள: கரியது வடிகொடு – சிவன் ஆண் யானை உரு கொள்ள)
சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உருகொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!
பிள்ளையார் பிறப்பு! தேவாரப் பாடல்
Leave a comment