முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கொடி!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ரூ. 850 கோடி முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிகாகோ,செப்.7- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.850 கோடி தொழில் முதலீடு செய்ய 3 அமெரிக்க நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டிற்கு பல் வேறு தொழில் முதலீடு களை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். உலகப் புகழ் பெற்ற பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.
பல முன்னணி நிறுவன அதிபர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா சிகாகோவில் கடந்த 5ஆம் தேதியன்று முதலமைச்சர் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன், விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.
பார்ச்சூன் 1000 நிறுவனங் களில் ஒன்றான லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம், வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலக ளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும்.

லிங்கன் எலக்ட்ரிக் நிறுவ னத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட் ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மய்யத்தை விரிவாக்கம் செய் வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியது.
விஷய் பிரிஷிஷன், செமி கண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, அய்ரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக்கொண்டுள்ளது. விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற் கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மய்யத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

விஷய் பிரிஷிஷன் நிறுவனத் தின் முதுநிலை விற்பனை மேலாளர் ஷிர்வர் ஸ்டீபன். சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், அதன் மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரி வித்தார்.
அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
போர்டு மோட்டார் நிறுவ னத்தின் துணை நிறுவனம் விஸ்டியன்.

இது உலகளவில் 17 நாடுகளில் இயங்கி வரு கிறது. இது பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். உலகின் பெரும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன மின்னனுவியல் பாகங்களை தயாரித்து அளித்து வருகிறது. உலகளாவிய வாகன மின்னனுவியல் வினியோக நிறுவனம் இதுவாகும்.
இந்தியா, மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சு கல், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, ஸ்லோ வாக்கியா, ருமேனியா, பல் கேரியா, அங்கேரி, துனிசியா, சீனா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் பொறியியல் மய்யங்களை கொண்டுள்ளது விஸ்டியன் நிறுவனம்.

விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோவையில் மின்னணு உற்பத்தி மய்யத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள் ளப்பட்டது.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவ னத்தின் மேலாண்மை இயக் குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *