ஜனநாயகம் பற்றி மேல் ஜாதிக்காரர்களுக்கும், பணக்காரர் களுக்கும் அதிக கவலை எப்படி இருக்கும்? ஏழை மக்களுக்குத்தான் இருக்க முடியும். மேல் ஜாதிக்காரர்களும், பணக்காரர்களும் 100க்கு 20 பேர்களாவது இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். கீழ் ஜாதிக்காரர்களும், ஏழை மக்களும்தான் 100க்கு 80 பேர்கள்! ஆகவே இந்த ஜனநாயகம் நல்ல வண்ணம் நடந்து சமதர்மத் திட்டம் வெற்றி பெற மேல் ஜாதிக்கார பணக்காரர்கள் துளியாவது முன்வருவார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’