கல்லக்குறிச்சி, செப்.7- கல்லக்குறிச்சி பகுத்தறிவாளர் கழகம், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தமிழ் துறையும் இணைந்து நடத்திய தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 05.09.2024 அன்று காலை 10:30 மணி அளவில் கல்லக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சிக்கு கல்லக்குறிச்சி பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ. எழிலரசன் ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ.முனியன் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.
மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன். கல்லக்குறிச்சி கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு, கல்லக்குறிச்சி நகர கழக தலைவர் இராம.முத்துசாமி, கல்லக்குறிச்சி நகர செயலாளர் நா.பெரியார், பகுத்தறிவு இலக்கிய மன்றத்தின் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் புலவர் பெ.சயராமன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அ.ஆறுமுகம், கல்லக்குறிச்சி பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் வீ.முருகே சன், ஆத்தூர் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் நீ.சேகர், ஆத்தூர் பகுத்தறி வாளர் கழக மாவட்டத்தலைவர் வ.முரு கானந்தம், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உரையாற்றினர்.
கல்லக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் மா. மோட்சஆனந்த், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பெ..விஜயகுமார், கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கா.சங்கர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் மாணவர்களை அழைத்து வந்திருந்த உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்.கே.எஸ்.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த 6 மாணவர்களும், பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இருந்து 12 மாணவர்களும், இமாக்குலேட் கல்லூரியில் இருந்து ஒரு மாணவியும், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆத்தூர் கல்லூரியை சார்ந்த ஒரு மாணவியும், பங்காரம் சிறீலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்களும், கல்லக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சார்ந்த 10 மாணவர்களும், நிகழ்ச்சியில் அய்ந்து மாணவர்களும் 33 மாணவிகளும் மொத்தம் 38 மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். கல்லக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி தமிழ் துறையைச் சார்ந்த மாணவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டனர்.
நடுவர்களாக கல்லக்குறிச்சி பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ. எழிலரசன், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் அவர்களும், கல்லக்குறிச்சி மாவட்டக் காப்பாளர் முனைவர் ம.சுப்புராயன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் பெரியார் ஆற்றிய புரட்சிகளும் பெரியார் பிறவாமல் போய் இருந்தால் தமிழ்நாடு இவ்வளவு முன்னேற்றம் கண்டு இருக்காது என்கிற செய்திகளையும், பெரியார் இன்றும் என்றும் ஆதிக்கம் இருக்கும் வரை தேவைப்படுவார் என்பதையும், பெரியார் காண விரும்பிய சமத்துவ சமுதாயத்தையும் அழகாக எடுத்துரைத்து அருமையாக சொல் கோத்து பாமாலையாக தொடுத்து சிறப்பாக பேசினார்கள்.
பேச்சு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ்களைத் தமிழ் துறைத்தலைவர் அவர்களும், கணினி அறிவியல் துறை தலைவர் அவர்களும்,கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் சேர்ந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
போட்டியில் முதல் பரிசு தி. எஃபினா மேரி, முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு டாக்டர் ஆர் கே எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்திலி. அவர்களுக்கு முதல் பரிசு ரூ 3000 மருத்துவர் கோ.சா.குமார் வழங்கினார்.
இரண்டாம் பரிசு பெ.கோபிகா, மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆத்தூர் பரிசுத் தொகை ரூ2000, ப.க.பெ.எழிலரசன் வீ. முருகேசன் ஆகியோரின் சார்பில் வழங்கப்பட்டது.
மூன்றாம் பரிசு நா.குழந்தை தெரசா, இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் இமாக்குலேட் கல்லூரி பரிசுத் தொகை ரூ1000த்தை மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்புராயன் வழங்கினார்.
நிகழ்ச்சி நிறைவாக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் நன்றி உரையாற்றினார்.