புதிரைவண்ணார் நல வாரியத்தைத் திருத்தி அமைத்து கடந்த 4.8.2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை வரவேற்கத்தக்க தாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியில் ‘திராவிட மாடல்’ அரசு காட்டி வரும் அக்கறைக்கும் தனிக் கவனத்துக்கும் இந்த ஆணை ஒரு சான்றாகும்.
சமூகநீதியில் புதிரை வண்ணார் என்ற பிரிவு நியாயமாக எஸ்.சி., எஸ்.டி., ஆதிதிராவிட பழங்குடி இனப் பிரிவின்கீழ் இணைக்கப்பட்டு, தனி இட ஒதுக்கீடு பெற முழுத் தகுதி படைத்தவர்கள்!
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அடுக்குமுறை பேத சமூக ஏற்பாட்டின்படி, பல ஊர்களில் மிகமிக கீழ் நிலையில் ஒதுக்கப்படும் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள சமூகம்.
முன்பு அருந்ததியினர் பிரிவுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கியது போல ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்வதும் அவசியமாகும்.
மாண்புமிகு முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் இதுபற்றி ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
7.8.2023