இவர் தான் ரேபரேலி தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அதிதி சிங். இவர் தன்னிடம் மனு கொடுக்க வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பொது வெளியில் ஆபாசமாக பேசி, உங்களை எல்லாம் சமமாக பேச வைத்ததே தவறு.
இதில் எனது பேச்சுக்கு எதிர் – பேச்சு வேற பேசுகிறாயா? என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது ஆதரவாளர்களிடம், “இந்த ஆள் கை காலை உடைத்து அனுப்புங்கள். அடுத்தமுறை இவன் என்னைத்தேடி வரவே கூடாது” என்று பேசியுள்ளார்.
இந்த காணொலி பரவியுள்ள நிலையில் சொந்தப் பிரச்சினை என்று கூறி காவல்துறை வழக்கும் பதிவு செய்யவில்லை. அந்த நபர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.