முதன் முதலில் 1845இல் ராபர்ட் தாம்சன் என்பவர் காற்றடைத்த டியூப் ரப்பர் குழாய் மூலம் சிறிய மிதி வண்டியை (சைக்கிளை) ஓட்ட முடியும் என்று கண்டு பிடித்திருந்தார்.
ஆனால், அவரால் அது முழுமையானதாக இல்லை அது அந்த அளவு மேம் படுத்தப்படவில்லை மற்றும் பிரபலமாகவில்லை என்பது John Boyd Dunlop ஜான் பாய்டு டன்லப்புக்குத் தெரியாது.
அவர் குதிரை வண்டிகள் மற்றும் மிதிவண்டி போன்றவற்றில் இதுபோன்ற டியூபில் காற்றடைக்கும் தொழில்நுட்ப முறையை தனது மகனின் மரத்தாலான சைக்கிளுக்கு தான் சோதனை செய்தார்.
பிறகு காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888இல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890இல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார். பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த டபிள்யு. ஹெச். டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது.
டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங் கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது.
தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாப மடையவில்லை. தனது காப்புரிமையை 1896இல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார்.
ஆனால், அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888இல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன.
இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895இல் முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900-மாவது ஆண்டுக்குப் பின் மிதிவண்டிகளுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது.
இன்று இந்த உலகில் டியூப்லெஸ் டயர்கள் எனப்படும் டியூப் இல்லாத டயர்கள் வந்துவிட்டாலும் இன்றைய உலகின் அனைத்து போக்குவரத்து தொழிற்சாலை உற்பத்தி போன்றவற்றில் இவரது பங்களிப்பு மனித குலத்திற்கே உதவியது.