ஏன் இந்த வீண் விளம்பரம்?
மோடி 3 நாள் பயணமாக புரூனே, சிங்கபூர் சென்றுள்ளார். ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மேற்கு ராஜஸ்தான் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இவர்களின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் ஆந்திரா மாநிலத்தில் தெற்கில் சில மாவட்டங்களைத் தவிர மத்திய மற்றும் வடக்கு மாவட் டங்கள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி உள்ளன. பாதிப்புகள் பல கோடி ரூபாய் களைத் தாண்டியது.
உயிரிழப்புகள் 40அய்த் தொட்டுவிட்டன
ஆனால், மோடியோ எப்போதும் போல் தன்னை வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் பெருமையோடு வரவேற்கிறார்கள் என்று காட்டுவதற்கு, அவர் செல்வதற்கு முன்பே இங்கிருந்து நூற்றுக்காணக்கான துணை நடிகர்கள், நடனக்கலைஞர்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் வரவேற்பு பணியில் உள்ள பெண்கள் ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் அனுப்பி விடுவார்கள். இவர்கள் அனை வருக்கும் மோடி அந்த நாட்டிற்கு வந்த பிறகு அவரை வரவேற்பதுபோல் நடிக்கவும், ஆடிப்பாடவும் மோடி மோடி என்று கத்தவும் பயிற்சி கொடுக் கின்றனர். இதற்காக பி.ஆர்.ஓ.க்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இது 2014ஆம், ஆண்டு முதல் முதலாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு ஆஸ்திரேலியா சென்றது முதல் தற்போது புருனே – சிங்கப்பூர் பயணம் வரை இந்த வீண் விளம்பரம் தொடர் கதையாகி உள்ளது. சிங்கப்பூரில் மோடியை இந்தியர்கள் வரவேற்று ஆடிய நிகழ்ச்சியில் மேள தாளம் இசைக்கப்பட்டது.
அனைத்து தொலைக் காட்சிகளாலும் ஆகா மோடியை வரவேற்கும் அயல்நாட்டு இந்தியர்கள் என்று புகழாரம் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் மோடி மேளம் அடித்த பெரிய டிரம்மில் மும்பை அலைபேசி எண்ணும், மும்பை செம்பூர் பகுதியில் உள்ள முகவரியும் இருந்தது. அது தொழில் முறையில் விழாக்களுக்கு சாலைகளில் பெரிய டிரம்ஸ் வாசிக்கும் ஜெயந்த் பாட்டில் குழுவின் எண் ஆகும். இந்தக்குழுவினர் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்று மேளம் அடிப்பார்கள்.
மோடியின் இமேஜைப் பெருக்கிக் காட்ட சிங்கப்பூருக்கும் இவர்களைக் கொண்டுபோய் ஆட விட்டுள்ளனர். இவ்வளவு செய்தவர்கள் டோல் என்ற இசைக்கருவியில் உள்ள மும்பை செம்பூர் பகுதி முகவரி மற்றும் அலைபேசி எண்ணை மறைக்க மறந்துவிட்டனர்.