அறிவார்ந்த, சமத்துவ சமூகம் உருவாக, மத – ஜாதிய மதவாத வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்!

2 Min Read

தந்தை பெரியார் கொள்கை வழி நிற்போம்!
தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்
– துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, செப். 6- அறிவார்ந்த, சமத்துவ சமூகம் உருவாக, மத – ஜாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (6.9.2024) காலை 11.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்”, மாணவர் அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், தலைமையில், அணியின் தலைவர் இரா. ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில, மாநகர மாணவர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-

தனித் தீர்மானம்
அறிவார்ந்த, சமத்துவ சமூகம் உருவாக, மத – ஜாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்!
“கல்வியினுடைய குறிக்கோள் என்பது அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்” என்ற தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலம் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் –கழகத் தலைவர் அவர்களின் ஆட்சி காலம் வரை தொடர்கிறது.

அண்மைகாலமாக ஆன்மிகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் ஜாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து, இளைய தலைமுறையினரை அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் தேடலோடு கூடிய (Scientific Temper) அறிவார்ந்த சமுதாயமாக கட்டமைத்திடவும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும், தி.மு.க மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *