வல்லம், செப். 6- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்கக நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய மண்டல அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் களுக்கான ஆய்வுக் கூட்டம் 30.8.2024 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணியளவில் துவங்கியது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 93 நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இத்துவக்க விழாவில் சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங் கிணைப்பாளர் டி.முரளிதரன் வர வேற்புரை ஆற்றினார்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தனது தலைமையுரையில் நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தி சமுதாய சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துகிறது என்றும் நாட்டு நலப்பணித்திட்டம் தங்களின் மென்திறன்களையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள இது வாய்ப்பாக அமைகின்றது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை ஜி.செங்கொடி My Bharath Portal Registration பற்றி விரிவாகக் கூறினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் ஆர்.மணிவண்னன் விருதுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பதை விளக்கிக் கூறினார்
நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் ஆர்.மணிவண்னன் நன்றியுரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி. முத்துகுமாரபதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.