புதுக்கோட்டையில்…
புதுக்கோட்டை, செப்.5- புதுக்கோட்டையில் பெண்ணுரிமைப் பாதுகாப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு நகரத் தலைவர் ரெ.மு.தர்மராசு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.
கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க.அமைப்பாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செ.இராசேந்திரன், மகளிரணியைச் சேர்ந்த மரகதம், ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தலைமைக் கழகப் பேச்சாளர் புவனகிரி யாழ் திலீபன் சிறப்புரையாற்றுகையில், பெண்களுக்கு பெண்ணுரிமைப் பாதுகாப்பு என்ற வகையில் தமிழ்நாட்டில்தான் அதிக பாதுகாப்பு இருக்கிறது. பாத்திரம் மட்டும் தேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தந்தையின் நிலப் பத்திரத்திலும் உரிமைகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு ஆண்களுக்குள்ள அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள். இது தமிழ்நாட்டில்தான் நடந்தேறி இருக்கிறதே தவிர வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அண்மைக் காலச் செய்திகள் நமக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
மிகச் சமீபத்தில் புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு நாளிதழ் உருவாக்குதல் மற்றும் வடிவமைப்பு குறித்த 15நாள் பயிற்சி அளிக்கப் பட்டது. அதன் நிறைவு நாளில் அவர்கள் அதாவது அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட 42மாணவியரும் இணைந்து எட்டு பக்கங்கள் கொண்ட ஒரு நாளிதழை உருவாக்கி விட்டார்கள். நாளிதழில் இடம் பெற்றிருக்கும் அத்தனை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. அந்தளவுக்கு பெண்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்பதற்கு அது ஒரு சான்று.
மேலும் இங்குள்ள மாவட்ட ஆட்சியர் மு.அருணா, காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே, கோட்டாட்சியர் அய்ஸ்வர்யா, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், மாவட்ட சேர்மன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் என பல உயர் பதவிகளிலும் பெண்கள்தான் இருந்து ஆட்சி அதிகாரம் செய்கிறார்கள். அவர்களை மீறி எதுவும் யாரும் செய்துவிட முடியாது. அத்தனை அதிகாரங்களையும் பெற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. வெறுமனே கடவுள் மறுப்பாளர் பெரியார் என்பதை மறந்து இத்தனை உரிமைகளுக்காகவும் தெருவில் இறங்கி நின்று போராடிப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் பெண்ணுரிமைகள் குறித்தும் மூட நம்பிக்கைகளுக்காக அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசுகிறோம் என்று பேசினார். நகர இளைஞரணி அமைப்பாளர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை- நெமிலியில்…
நெமிலி, செப். 6- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் 2-09-2024 அன்று மாலை சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(H) விளக்க பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.கோபி , பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார், மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன்தாஸ், ம.தி.மு.க.வின் ஏ.ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் அனை வரையும் வரவேற்றார் நெமிலி ஒன்றிய தலைவர் சு.சங்கர்.
தொடக்க உரையை தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் நிகழ்த்தினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிங்கப்பூர் சங்கர் ஒருங்கிணைத்தார். ம.திமு.க.நெமிலி ஒன்றிய செயலாளர் கெ.ஆறுமுகம் கருத்துரையாற்றினார்.
சிறப்பான உரையை திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆற்றினார். முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ப.க.செயலாளர் சி.நீ.வீரமணி தலைமையில் மேஜிக் நிபுணர் க.ஏ.தமிழ்முரசு அவர்களின் மந்திரம் அல்ல தந்திரமே! நிகழ்ச்சி மக்களை மெய் சிலிர்க்க வைத்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட தோழமை கட்சியின் பொறுப்பாளர்கள் தி.முக.வின் காவேரிப்பாக்கம் மேனாள் நகர செயலாளர் போ.பாண்டுரங்கன் ,வி.சி.க.நெமிலி ஒன்றிய செயலாளர் செ.நரேஷ், நெமிலி வி.சி.க.தோழர் இரா.திருநாவுக்கரசு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆர்.வெங்கடேசன். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியாக நன்றி உரை நிகழ்த்தினார்.
சைனபுரம் கோ.கண்ணியப்பன்.மேற்கண்ட கூட்டம் சிறப்படைய தி.மு.க.வின் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.வடிவேல், மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்ஜிசி பெருமாள், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.இரவீந்திரன்,தி.மு.க.நகர செயலாளர் ஞா.ஜனார்தனம், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் ஆகியோர் பெரும் ஒத்துழைப்பை வழங்கி தாய்க்கழகத்தை மகிழ்வடைய செய்தனர். நிகழ்ச்சியை மாவட்ட திராவிடர் கழகம் சிறப்பாக ஏற்பாடு செய்தது.
சென்னை – கும்மிடிப்பூண்டியில்…
கும்மிடிப்பூண்டி, செப்.6- கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகம் சார்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 30.8.2024 அன்று மாலை 6:00 மணி அளவில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 A(h) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் ஜே.பாஸ்கர் தலைமையேற்றார், மேனாள் மாவட்ட தலைவர் சே.உதயகுமார் வரவேற்பு உரையாற்றினார்.
மேனாள் மாவட்ட செயலாளர் ர.ரமேஷ், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை பொறுப் பேற்றனர்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் ப. சக்கர வர்த்தி தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மிகச் சிறப்பான இக்கூட்டத்தின் இடையே கடும் மழை பொழிந்தது .மழை பொழிந்தாலும் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. மக்கள் கடைவீதியின் ஓரங்களில் நின்று கூட்டத்தை ரசித்துக் கேட்ட னர்.
இந்தக் கூட்டத்தில் கும்மிடிப் பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் பொதுக்குழு உறுப்பினர் ர.விஜயகுமார், மேனாள் மாவட்ட அமைப்பாளர் ஆ.விஜயரத்தினம், மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் அசோக் குமார், புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், புழல் நகர தலைவர் இரா. சோமு, பொன்னேரி நகர தலைவர் வே .அருள், பொன்னேரி இளைஞரணி செயலாளர் க. சுகன்ராஜ் மேலும் வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் மற்றும் தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண் ஆகியோர் பங்கேற்றனர்.
மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்த கட்சியைச் சார்ந்த தோழர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட நகர தலைவர் மு.ராமு அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
பொன்னமராவதியில்….
பொன்னமராவதி, செப். 6- பொன்னமராவதியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டை யொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணு ரிமைப் பாதுகாப்பு – இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A (h) பிரிவு விளக்க திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 29-8- 2024 அன்று மாலை 5 மணி அளவில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பொன்னமராவதி ஒன்றியத் கழகத் தலைவர் சி.த.ஆறு முகம் தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலாளர் வீ. மாவலி வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக காப்பாளர் ஆ. சுப்பையா, மாவட்ட கழக தலைவர் மு. அறி வொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
சோம நீலகண்டன் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை நிகழ்த்திக் காட்டினார். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா செந் தூரப்பாண்டியன் தொடக்க உரை யாற்றினார்.
நிறைவாக கழகப் பேச்சாளர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்.ஏராளமான பொதுமக்கள் அவரது பேச்சைக் கேட்டு பயனுற்றனர்.
இறுதியாக ஒன்றிய கழக இளை ஞரணி தோழர் ப. நாகார்ஜூன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்ஆலவயல் முரளி சுப்பையா,தி.மு.க வடக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் மா. சுரேஷ் பாண்டியன், சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் தோழர் பக்ருதீன், வி.சி.க தோழர் சிவப்பிரகாசம், தொ.மு.ச ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அப்பாஸ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு சேகர், மாவட்டத் துணைச் செயலாளர் வெ. ஆசைத்தம்பி, பொன்னமராவதி ஒன்றியத் துணைத் தலைவர்
க. ஆறுமுகம், துணைச் செயலாளர் மனோகரன், விராலிமலை ஒன்றியத் தலைவர், ஓவியர் சி. குழந்தைவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் தி. பொன்மதி,மாவட்ட மாணவர் கழகத் தலைவர் தே. குட்டி வீரமணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆறு. பாலச் சந்தர் இளைஞரணித் தோழர் விநாயகமூர்த்தி, மகளிரணித் தோழர்கள்சி. ராசி,ஞானசுந்தரி, புனிதா, ப.கதோழர் நாகலட்சுமி, மாணவர் கழகத் தோழர்இனியன். ,பெரியார் பிஞ்சுகள் ரா.ச.செம்மொழி, ரா.ச.புரட்சியாளன், ரா.ச.பெரியார் சம்ரன், ம.தமிழினியன், ம.மகிழன், உள்ளிட்ட தோழர்களும், ஏராளமான பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை – அரும்பாக்கம் – என்.எஸ்.கே. நகரில்…
அரும்பாக்கம், செப். 6- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் 03.09.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) விளக்கப் பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையிலும், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது.
துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை விளக்க உரையாற்றினார்.
இறுதியாக திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, ஒன்றிய அரசு அரசு பணிகளில் ஏற்படுத்தும் குளறுபடிகளை விளக்கிக் கூறியும், ‘புதிய கல்வி திட்டம்’ என்ற பெயராலே தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காமல் துரோகம் விளைவிக்க நினைக்கும் நிலையை எடுத்துக் கூறியும், ‘புதிய கல்விக் கொள்கையால் கல்வி வளர்ச்சியை 50 விழுக்காடாக உயர்த்துவோம்’ என்று ஒன்றிய பிஜேபி அரசு கூறுகிறது, ஆனால் திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாடு அரசு, எப்பொழுதோ அய்ம்பது விழுக்காட்டை எட்டி விட்டது. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியும் மக்களிடம் பரவிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை விளக்கியும், கொட்டும் மழையிலும் சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார்.
முன்னதாக ‘அறிவுமானன்’ கொள்கை முழக்க பாடல்களை பாடினார்.
கூட்டத்தின் முடிவில் அரும்பாக்கம் த.இராஜா நன்றி கூறினார்.
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் சு.அன்புச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், வை.கலையரசன், க.கலைமணி, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் பகுதி பொறுப்பாளர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், வடசென்னை க.செல்லப்பன், க.துரை, மு.வேலவன், மு.செல்வி(ஆவடி மாவட்டம், மகளிர் அணி), க.ச.பெரியார் மாணாக்கன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம், அயன்புரம் சு.துரைராசு, ச.இராசசேகரன், செல்வம், அ.ராஜசேகரன், சஞ்சய் மற்றும் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.