வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கம்
தேர்தல் துறையிடம் தி.மு.க. புகார்
சென்னை, செப்.6 வாக்காளா் பட்டியலிலிருந்து ஆயிரக்கணக் கானோரின் பெயா்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாக தோ்தல் துறையிடம் திமுக புகாா் தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியான வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்கு முன்பு அவா் களிடம் உரிய விளக்கம் கேட்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆா்.எஸ்.பாரதி 4.9.2024 அன்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சீரமைப்பு மற்றும் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்தப் பணிகள் தொடா்பான திமுகவின் சில முக்கிய கவலைகளை கடிதம் மூலமாகப் பகிா்கிறோம். வாக்காளா் பட்டியல் சீரமைப்புப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
வாக்காளா்கள் நீக்கம்: அவா்களது இந்தப் பணியை திமுக சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவா்கள் கண்காணித்து வருகின்றனா். வாக்காளா் பட்டியலிலிருந்து ஆயிரக் கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. இது மாநிலம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒளிப்பட அடையாள அட்டை வைத்துள்ள பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வரக்கூடிய வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவா்கள் கடந்த தோ்தல்களில் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனா்.
காட்சிப்படுத்த வேண்டும்: இறப்பு மற்றும் நீக்கப்பட்டவா்களின் பெயா், விவரங்களை தயாா் செய்து அதனை அரசு அலுவலகங்களிலோ அல்லது இணையதளத்திலோ காட்சிப்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை முடித்த பிறகே, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். வாக்காளா் பட்டியல் சீரமைப்புப் பணிகளை தோ்தல் துறையின் வாக்குச் சாவடி அலுவலா்களுடன் இணைந்து, எங்களது கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இறந்த வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக படிவம் 7-ஐ அளிக்கிறோம்.
பூா்த்தி செய்யப்பட்ட அந்தப் படிவத்துடன் இறப்புச் சான்றையும் இணைத்து அளிக்க வேண்டும் என்று வாக்குச் சாவடி அலுவலா்கள் கூறுகின்றனா்.
வாக்குச் சாவடி அலுவலா்களில் பெரும்பாலானவா்கள், வருவாய்த் துறையைச் சோ்ந்தவா்கள்தான். அவா்களால், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை எளிதாகப் பெற முடியும். எனவே, அந்தப் பணியை வாக்குச் சாவடி அலுவலா்களே செய்ய வேண்டும்.
பட்டியலிலிருந்து வாக்காளா்கள் பெயா்களை வாக்குச் சாவடி அலுவ லா்களே தன்னிச்சையாக நீக்கக் கூடாது. நீக்குவதற்கு முன்பாக, வாக்காளா்களிடம் உரிய தாக்கீது அளித்து விளக்கம் கேட்க வேண்டும். பட்டியலில் இருக்கக் கூடிய தகுதியான வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்கு முன்பாக, அவா்களிடம் உரிய விளக்கம் கேட்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். அதன்பிறகே, பெயரை நீக்க வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.