பொதுவாக அன்னாசிப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் நமக்கு மூட்டுவலி வராமல் பாதுகாத்து, நமக்கு மலச் சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் இந்த பழம் நமக்கு தொப்பை போடாமல் பாதுகாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும் மேலும் இந்த பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. அன்னாசிப்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் நம் குடல் செரிமானத்திற்கு உதவுகிறது.
2. அன்னாசிப்பழத்தின் தண்டு, பழம் மற்றும் சாறு ஆகியவற்றில் இந்த நொதிகள் காணப்படும்.
3. இந்த நொதிகள் புரதங்களின் செரிமானத்திற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
4. அன்னாசிப்பழம் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
5. அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு போன்ற செரிமானப் பிரச்சினைகளுக்கு இந்த பழம் உதவும்.
6. அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆக்சிஜனேற்றியாகும்.
7. இந்த அன்னாசிப்பழம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
8. அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின்-சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
9. அன்னாசிப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.
10.இந்த அன்னாசிப்பழம் புற்றுநோய் எதிர்ப்புப் பண்பு களைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
11.அன்னாசிப்பழம் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கிறது.