6.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*அமெரிக்காவின் ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் கையெழுத்தானது
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை கீழே விழுந்து சேதம்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரிடம் சிலை செய்திட ஒப்பந்தம் தந்ததால் வந்த வினை என ராகுல் சாடல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்குக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு குகி அமைப்பு கடிதம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உ.பி. மாநிலத்தில் அம்ரோஹாவில் உள்ள ஒரு முக்கியப் பள்ளியில் ஏழு வயது மாணவன் தனது டிபனில் அசைவ உணவான பிரியாணியைப் கொண்டு வந்ததற்காக பள்ளியில் இருந்து வெளி யேற்றம். “வளர்ந்த பிறகு கோவில்களை இடிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த மாட்டேன்…” என பள்ளி முதல்வர் பேச்சு – காணொலி வைரல்.
தி டெலிகிராப்:
* நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவன் கோட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், இந்த ஆண்டு 14ஆவது தற்கொலை; தேர்வில் மோசடி செய்ததாக தந்தை குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா