அறந்தாங்கி, செப்.6- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி கீரமங்கலம் செப்டம்பர் 1 அன்று மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவியர்களுக்கு தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்-சமூக நீதி நாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற்றது குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பேச்சு போட்டியின் தலைப்புகளாக
1 பெரியார் ஒரு கேள்விக்குறி&ஆச்சரிய குறி
2 என்றும் தேவை பெரியார்
3 பெரியார் காண விரும்பும் சமுதாயம்
4 மண்டை சுரப்பை உலகு தொழும்
5 புரட்சியாளர் பெரியார்
6 பெரியாரால் வாழ்கிறோம்
7 பெரியார் பிறவாமல் இருந்தால்
8 சுய சிந்தனையாளர் பெரியார்
ஆகிய எட்டு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது பல்வேறு மாணவர்கள் வருகை தந்தார்கள் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ரூ.2000 (சேசு கலை அறிவியல் கல்லூரி ஆலங்குடி) இரண்டாவது பரிசு ரூ.1500 (கலாம் பாலிடெக்னிக் கல்லூரி ஆவணம்) மூன்றாம் இடம் (அரசு பாலிடெக்னிக் கல்லூரி அறந்தாங்கி). முதல் இடம் பெற்ற மாணவி பர்வதவர்தினி-க்கு ரூ.2000 பரிசு தொகையினை மாவட்ட பகுத்தறிவளர் கழக செயலாளர் க.வீரையா வழங்கினார்
இரண்டாம் இடம் பெற்ற மாணவர் பாலமுருகனுக்கு ரூபாய் 1500 அறந்தாங்கி நகர தலைவர் வேலுச்சாமி வழங்கினார். மூன்றாம் இடம் பெற்ற மாணவர் கு.சிந்தனைச்செல்வனுக்கு ரூபாய்1000 குப்பகுடி ஊராட்சி மன்ற தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இரா.இளங்கோ வழங்கினார்.
நடுவர்களாக கண் மருத்துவர் வீர.சொக்கலிங்கம், ஆ.வேலுச்சாமி சிறப்பாக பணியாற்றினார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் குருகுலம் பள்ளியின் நிறுவனர் சிவனேசன் மற்றும் ஆசிரியர்கள் அரங்கம் ஒளிபெருக்கி மற்றும் வருகை தந்த மாணவர்களுக்கு தேநீர் பிஸ்கட் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்கள்.
பள்ளிக்கும் பள்ளியின் ஆசிரியர் களுக்கும் மனமார்ந்த நன்றியினை மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கெடுத்து சிறப்பித்த பொதுக்குழு உறுப்பினர் த.சவுந்தரராஜன் மகளிர் அணி சவு.ஞானம்மாள் மகளிர் அணி சவு.திராவிடச்செல்வி பெரியார் பிஞ்சு செம்மகிழன் மற்றும் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.