மதுக்கூர் படப்பை காடு தோழர் திருக்குமரனின் தாயார் பாண்டியம்மாள் கடந்த 31ஆம் தேதி மறைவுற்றார். அவர்களின் இறுதி நிகழ்வு செப். 1ஆம் தேதி மாலை நடைபெற்றது. கழகத் தோழர்கள் மாவட்ட தலைவர், பெ வீரையன் வடக்கு மதுக்கூர் ஊராட்சி தலைவர் என்.கே.ஆர். நாராயணன், சிரமேல்குடி ராதா கிருஷ்ணன், மண்டலக்கோட்டை சரவணன், கருப்பூர் முருகேசன், நகரத் தலைவர் வி.பி.சிவகுமார், நகர அமைப்பாளர் எல்.சுரேஷ், ஒன்றிய தலைவர் புலவஞ்சி, அண்ணாதுரை, புலவஞ்சி காமராஜ் இறுதி மரியாதை செலுத்தினர். தொலைபேசி வாயிலாக தமிழர் தலைவர் ஆசிரியர், திருக்குமரனிடம் ஆறுதல் தெரிவித்தார்.