ஈரோடு, செப்.6- ஈரோடு பெரியார் மன்றத்தில் 04.09.24 அன்று மாலை 6.00 மணியளவில் அனைத்துக்கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டம் தி.மு.க மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியம், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த சண்முகம், ப.ரத்தினசாமி, நீரோடை நிலவன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் பிறந்தநாள் பேரணி நடத்துவது பற்றி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கல்வி உரிமை – மாநிலத்திற்கே மீட்புப் பேரணி சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கொங்கு விடுதலை புலிகள் கட்சி, சமூக நீதி மக்கள் கட்சி, ஜெய் பீம் மக்கள் கட்சி, அருந்ததியர் விடுதலை இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், சி.பி. அய், சி.பி.அய்.எம். ஆகிய அமைப்புகள் பேரணியில் பங்குபெறுவதாக தொலைபேசியில்ஒப்புதல் அளித்தனர்.
பெரியார் படிப்பக வாசகர் வட்டம் தலைவர் கனிமொழி நடராசன் நூறு மகளிரோடு பேரணியில் கலந்து கொள்வதாகவும் செலவுக்கு ரூ 10,000 வழங்குவதாகவும் அறிவித்தார்.