பாரெங்கும்! பகுத்தறிவாளர் கழகங்கள்
முதலில் தோன்றியது சென்னையில்
முதன் முதலில் “சென்னை பகுத்தறி வாளர் கழகம் ” துவக்க விழா 6-9-1970 மாலை சென்னை சிறுவர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு சட்ட மன்ற செயலாளர் க. து. நடராசன் தலை மையிலும், தமிழ்நாடு கல்வி அமைச்சர் நாவலர் முன்னிலையிலும் தந்தை பெரியார் அவர்கள் கழகத்தைத் துவக்கி வைத்து அறிவுரையாற்றியதுடன் அதன் வளர்ச் சிக்கு ரூ. 1000 நன்கொடை அளித்தும் ஊக்குவித்தார். அமைச்சர் நாவலர் சிறப்புரையாற்றுகையில் அரியதோர் விளக்கம் அளித்து “மூட நம்பிக்கையை தகர்த்து புதிய சமுதாயம் அமைப்போம்” என்று அறிவித்தார்.
சென்னை பகுத்தறிவாளர் கழக காப் பாளராக விடுதலை ‘ஆசிரியர் கி. வீர மணியும், தலைவராக க. து. நடராசனும் மற்றும் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
பெரிதும் ஆர்வத்துடன் உயர் அதிகாரிகள் உள்பட மாணவர்களும், பல் வேறு துறை பணியாளர்களும் பகுத்தறிவாளர் கழகத்தில் தொடர்ந்து உறுப்பினர்களாயினர். தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக பகுத்தறிவாளர் கழகங்களும், சிந்தனையாளர் கழகங்களும். பகுத்தறிவு மன்றங்களும் ஆங்காங்கு உள்ள பகுத்தறிவாளர்களால் தொடங்கப் பெற்று அடிக்கடி செயற்குழுக்களை அமைத்துச் செயல்படத் தொடங்கின.
சென்னை பகுத்தறிவாளர் கழகம் வாரமொருநாள் பகுத்தறிவுப்பாடம் நடத்த ஏற்பாடு செய்து பயிற்சி வகுப்பு நடத்தப் பட்டது. 21-11-1970 மாலை 6-15 மணிக்கு பெரியார் திடலில் பயிற்சி வகுப்பு ஆரம் பிக்கப்பட்டது. சென்னை பகுத்தறிவாளர் கழக புரவலரான விடுதலை ஆசிரியர் கி. வீரமணி கடவுள் என்ற தலைப்பில் முதல் பாடத்தைத் துவக்கி வைத்து முதல் பாடத்திற்கு அடிப் படை நூல்களாக தந்தை பெரியார் அவர் களின் “பிரகிருதி வாதம் அல்லது மெட்டி ரியலிசம்” சிங்காரவேலனாரின் “கடவுளும் பிரபஞ்சமும்” பெர்ட்ரண்டு ரஸ்ஸலின் “நான் ஏன் கிறித்தவனல்ல” என்ற நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினார்.