பெரியார் சமுதாய வானொலியின் சார்பாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஒலிபரப்பு

3 Min Read

அரசியல்

தஞ்சை, ஆக. 7- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் பெரியார் சமுதாய வானொலி 90.4, காலநிலை மாற்றம் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு கருத்து களை மக்களுக்கு வழங்கி வருகி றது. இதில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற் றும் போட்டிகள் நடத்தப்படு கின்றன. மாணவர்களுக்கு ஓவி யப் போட்டி,  ஒளிப்படப் போட்டி, பேச்சு மற்றும் கட்டுரைப் போட் டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் தஞ்சை மாவட்ட வனத்துறையுடன் இணைந்து செயல்படுத்திக் கொண்டு இருப்பது சிறப்பு அம்சமாகும்.

பெரியார் புரா கிராம மக்களுக்கு, காலநிலை மாற்றத்தினால் கிராமங்கள்கூட எவ்வாறு பாதிப் படைகிறது?. அதன் பாதிப்பிலிருந்து கிராமங்களை மீட்டெ டுக்க, இயற்கையை நாம் எவ் வாறு பாதுகாக்கவேண்டும் அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத் தப்பட்டு வருகின்றன.பெரியார் சமுதாய வானொலியின் சார் பாக காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு பாடல் இசைய மைத்து ஒலிபரப்பப்பட்டது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும்  சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு சிந்தனைகளை நேயர் களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். மற்றும் ஏறத்தாழ இரண்டாயிரத்து அய்நூறு  பள்ளி, கல்லூரி மாணவர்கள் , காலநிலை மாற்றம் என்றால் என்ன?. அதன் விளைவுகள் என்ன?. புவியின் சராசரி வெப் பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் ஆபத்து என்ன? என்பதைப் பற்றிய கருத்துகளை  இவ்விழிப்புணர்வு  மூலமாக அறிந்துகொண்டார்கள். “இனி சுற்றுச்சூழலைப் பாதுகாப் போம் “என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்ட மாணவர் கள் மரக்கன்றுகள் நற்று அதை நன்கு பராமரிப்பதில்  மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நூல் வெளியீடு

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, முனைவர் பா.ராம்மனோ கர் எழுதிய “இந்திய வனவிலங்கு  பாதுகாப்பும் மேலாண்மையும்”  என்ற நூலும் மற்றும் வே. பாலாஜி , முனைவர் பா.ராம் மனோகர், கோ.முருகேசன் ஆகி யோர் எழுதிய “அற்புத அலையாத்தி காடுகளும் அதன் வளர்ப்பு முறைகளும்” என்ற நூலும் வெளியிடப்பட்டன.

இப்பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கும் மோசமான செயல் பாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றினால்தான் இந்நிலை மையை சீராக்க முடியும்.   இதற் கான உறுதியை சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும்  ஏற்றுக்கொண்டு, மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச் சிகளை தொடர்ந்து நமது பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகம் செயல் படுத்தி  வருகிறது. 

கருத்தரங்கம்

காலநிலை மாற்றம் பற்றிய சமுதாய வானொலிகளின் செயற்பாடுகள் குறித்து சென் னையில் ஆய்வுகள் மற்றும் கருத் தரங்குகள் நடத்தப்பட்டன. இதில் பெரியார் சமுதாய வானொலி சார்பாக, மின்னணுவியல் மற் றும் தொடர்பியல் பொறியியல் துறையை சேர்ந்த முனைவர். ச. நர்மதா கலந்துகொண்டு வானொ லியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகம்  இயற்கை யுடன் இணைந்து செயல்படுவ தில் ஒரு முன்மாதிரியான நிறு வனமாக திகழ்கிறது என்பதை வலியுறுத்தினார்.

பெரியார் சமுதாய வானொலி இதில் சிறப்பாக பணி ஆற்றி வருவதாக டில்லியில் உள்ள ஸ்மார்ட்  (SMART- Seeking Modern Applications for Real Transformation) நிறுவனம் பாராட்டுதல்களை தெரிவித் தது குறிப்பிடத்தக்கதாகும். எத் தனையோ மாற்றங்களை மக்க ளிடையே உருவாக்கி, இச்சமு தாயத்தை நல்வழிப்படுத்த செயல்பட்டு வரும் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழகம்,  காலநிலை விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை மக்களி டையே வழங்கி வருவது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *