வல்லம். செப்.5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 100 ஆண்டுகள் இந்திய பொறியியல் வரலாற்றில் தஞ்சாவூரில் முதன்முறையாக விமானப் போக்குவரத்து துறை சார்ந்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மாநில மய்யத்தின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் இந்தியாவின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவு வாரியத்தின் கீழ் இன்ஸ்டியூட் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அஸ்ட்ரோ நாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, IEI தஞ்சாவூர் லோக்கல் சென்டரின் ஆதரவுடன் “விமானப் போக்குவரத்து துறையின் சிறப்பு அம்சங்கள் (சிவில் மற்றும் டிஃபென்ஸ்)” என்ற தலைப்பில் இந்த தேசிய இரண்டு நாள் கருத்தரங்கு ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 அன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் இந்தியாவின் ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் நிறுவனங்களின் ஸ்டார்ட்அப், தொழில் வல்லுநர்கள், புகழ்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட வல்லுநர்கள் தலைமையிலான தொழில்நுட்ப அமர்வுகள் இடம் பெற் றன. தமிழ்நாட்டு அரசின் முக்கிய நிறு வனமான ஸ்டார்ட்அப், டிஎன் மற்றும் புல்லினம் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ், ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர். இந்த நிகழ்வில் Altair, Infinity Arsenal, CADFEM Ansys மற்றும் Vimanna Labs India போன்ற குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் சிறப்பு கண்காட்சி காட்சியகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தொடக்க விழாவிற்கு இஸ்ரோ சிறீஅரிக்கோட்டாவின் விண்வெளி மய்யத்தின் மேனாள் இயக்குநர் டாக்டர் எஸ்.பாண்டியன் மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் டிஎன் நிறுவனத்தின் டெல்டா மாவட்டங்களின் திட்ட தலைவர் டாக்டர் பி.கருப்பண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி இக்கருத்தரங்கின் நூலினை வெளியிட்டனர். விமானப் போக்குவரத்து துறை மற்றும் விண்வெளி துறையில் இளைஞர்களின் முக்கிய பங்கு மற்றும் தொழில்முனைவோராக செயல்படுவதற்கு தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசின் செயல் திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் IEI விண்வெளி பொறியியல் அமைப்பின் தலைவர் அறிவுடைநம்பி, IEI தமிழ் நாடு மாநில மய்யத்தின் தலைவர் கார்த்திகேயன், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன், இஸ்ரோவின் மேனாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், IEI தமிழ்நாடு மாநில மய்யத்தின் கவுரவ செயலாளர் கோகுல், பேராசிரியர் கருணாகரன், IEI தஞ்சாவூர் மய்யத்தின் தலைவர் வெங்கடாசலபதி மற்றும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விண்வெளி துறையின் உதவி பேரா சிரியர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு தங் களின் ஆய்வுகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வின் தொழில்முறைக் கண்காட்சி மாணவ, மாணவிகள் மற்றும் கல்வியாளர்களை வெகுவாக ஈர்த்து ஊக்கப்படுத்தியது.
இந்நிகழ்வின் இரண்டாம் நிகழ்ச்சி யின் இறுதியில் பல்கலைக்கழக பதி வாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா பாராட்டு விழவிற்கு தலைமையேற்று கருத்தரங்கில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அவர்கள் உரையாற்றும் போது இந்தியாவில் விண்வெளி பொறியியல் துறை வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது. இக்கருத்தரங்கு மாணவர்களை விமானம் மற்றும் விண்வெளித் துறை சார்ந்த தொழில்முனைவோராக மற்றும் விஞ்ஞானிகளாக தங்களை உருவாக்கிக் கொள்ள முக்கிய பங்கு வகித்தது என்று கூறினார். இப்பாராட்டு விழாவில் IEI தமிழ்நாடு மாநில மய்யத்தின் கவுரவ செயலாளர் கோகுல், பேராசிரியர் கருணாகரன், IEI தஞ்சாவூர் மய்யத்தின் தலைவர் வெங்கடாசலபதி, பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் விண்வெளி பொறியியல் துறையின் தலைவர் கார்த்திக் சுப்பிரமணியன் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விண்வெளி துறையின் உதவி பேரா சிரியர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.