சேலம், செப். 5- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்டங் களில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் நேற்று (செப். 4) காலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,530 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,888 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.32 அடியிலிருந்து 116.39 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 87.82 டிஎம்சியாக உள்ளது.