அக்டோபர் 1ஆம் தேதி முதல் தூத்துக்குடி – மாலத்தீவு இடையே கப்பல் போக்குவரத்து

2 Min Read

சென்னை, செப்.5- ‘இந்தியா – மாலத்தீவு’ இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த தூத்துக்குடி- மாலத்தீவு இடையே அக்டோபர் 1ஆம் தேதி முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர் காமராஜர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல் சேவை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் சேவையும் நடந்து வருகிறது.

இதுதவிர கடந்த மாதம் 16ஆம் தேதியில் இருந்து சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் நாகப் பட்டினம்- இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே யான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான நேரடி கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையானது இந்திய பெருங்கடல் பகுதியில் இரு நாடு களும் மேற்கொண்ட இணைப்பு முயற்சிகளுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் என்கின்றனர்.

தூத்துக்குடி- மாலத்தீவு

இதுகுறித்து கப்பல் போக்குவரத்தை தொடங்க இருக்கும் எச்வி.கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (HV Cargo
Logistics) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் கூறும்போது, ‘இந்தியா- மாலத்தீவு இடையே வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் தூத்துக்குடி- மாலத்தீவு இடையே அக் டோபர் 1ஆம் தேதி முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

இதன்மூலம் வாராந்திர அடிப்படையில் செலவு குறைந்த மற்றும் விரைவான சேவை வழங்கப்படுகிறது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து இதில் அடங்கும். இந்த புதிய சேவை செலவு குறைந்த போக்குவரத்தாக இருக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டு உள்ளது.

இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 30ஆம் தேதி வரை முதல் கட்டமாக 7 மாதங்கள் இந்த சேவை நடக்க இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு 500 கடல் நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் இந்த தூரத்தை கடக்க 2½ நாள்கள் வரை ஆகும்.

வலுப்படும் வர்த்தக உறவு

குறிப்பாக மாலத்தீவின் உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கு தேவையான கட்டு மானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் இந்த சேவை உதவிகரமாக இருக்கும்.

நேரடி கப்பல் சேவை

நேரடி கப்பல் சேவை மூலம் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் கடல்சார் வர்த்தக தொடர்புகள் மேம் படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் அருகில் உள்ள 1,500 தீவுகளுக்கும் நேரடியாக சென்று சரக்குகளை கையாளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *