நாட்டில் இருக்கின்ற வேலையையும், மக்கள் எண்ணிக்கையையும், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு, அந்தச் சாமான்களை இயந்திரங்களால் செய்வதன் மூலம் குறையும் நேரத்தைக் கழித்து, மிகுதியுள்ள நேரத்தை எல்லா மக்களுக்கும் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் வாழ்நாள் ஜீவனத்திற்கு வேண்டிய முழுக் கூலியையும் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், வேலை சரியாய் போய்விடுமா, இல்லையா? அதாவது, ஒரு வாரத்திற்கு ஒரு மனிதனுக்கு இத்தனை மணி நேரம் மாத்திரம் வேலை செய்தால் போதும் என்கின்ற முறையில் பங்கிட்டுக் கொடுத்து விட வேண்டும். இப்படிச் செய்தால், ஒரு வாரத்தில் ஒரு நாள்கூட ஒரு மனிதனுக்கு வேலை செய்ய அவசியம் ஏற்படாது. மீதி நாட்களில் கஷ்டப்படாமல் சாப்பிடக்கூடும்.
(‘குடிஅரசு’ – 14.6.1931)