மதுரை, செப். 5- மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழாவினையொட்டிக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக அலுவலகமான பெரியார் மய்யத்தில் பெரியார் வீரமணி அரங்கத்தில் 1.9.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
காலை 9 மணியிலிருந்து மாணவ-மாணவிகள் வருகை தரத் தொடங்கினர். நிகழ்ச்சியின் நோக்கத்தையும், விதிகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு போட்டியினைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் நல்லதம்பி, மனநல ஆலோசகர் ஜெ.வெண்ணிலா, முனைவர் வா.நேரு ஆகியோர் நடுவராக இருந்தனர்.
மதுரை மாநகரை சுற்றியுள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, யாதவர் கல்லூரி, இ.எம்.ஜி யாதவர் மகளிர் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரி, கப்பலூர், விருதுநகர் செந்தில்குமார் நாடார் கலைக் கல்லூரி, ஆமத்தூர் ஏ ஏ ஏ கல்லூரி உட்பட, பல கல்லூரிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு நமது மாநில பகுத்தறிவாளர் கழகம் கொடுத்த ஏழு தலைப் புகளில் எழுச்சியோடும், உணர்ச் சியோடும் அதே நேரத்தில், கருத்தாழமிக்க உரைகளைத் தந்தார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மிகச் சவாலாக இருந்தது என்று நடுவர்கள் பிரமித்துக் கூறும் அளவிற்கு மாணவ மாண விகளின் பேச்சு அமைந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
போட்டியில் தேர்வுபெற்று தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர் ச.சுபநிதி சுப்பிரமணி முதல் பரிசு ரூபாய் 3000 பெற்றார். கப்பலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி போ.சங்கீதா ரூபாய் 2000 இரண்டாவது பரிசாகப் பெற்றார். அமெரிக்கன் கல்லூரி மாணவி மு.ஹெப்சிபா மார்கிரேட் மற்றும் பா.சுரேகா, பாத்திமா கல்லூரி மாணவி ஆகிய இருவரும் மூன்றாம் பரிசு ரூபாய் தலா ஆயிரம் பெற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமைக் கழக அமைப்பாளர் வே. செல்வம், பகுத்தறிவாளர் கழகத் தலைமைக் கழக அமைப் பாளர் சி.மகேந்திரன், மதுரை மாவட்டத் திரா விடர் கழக தலைவர் அ முருகானந்தம், மதுரை மாவட்டத் திராவிடர் கழக செயலாளர் இரா.லீ.சுரேஷ், ஆகியோர் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கியும் வாழ்த்துரை நல்கியும் நிக ழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் மந்திரமா, தந்தி ரமா? நடத்துநர் பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் பகுதிச் செயலாளர் சுப்பையா கழக இளைஞரணிச் செயலாளர் க.சிவா, மாணவர் கழக அமைப் பாளர் தேவராஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக மாணவ, மாண விகளை வாழ்த்தியும், நன்றி கூறியும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம் உரையாற்றினார்.
மாணவ, மாணவிகளுக்கு காலை தேநீர், சிற்றுண்டி, மதியம் உணவு வழங்கி விருந் தோம்பல் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி இறுதியில் பேசிய மாணவ மாணவிகள் “ஒரு போட்டிக்கு வந்த உணர்வே எங்களுக்கு இல்லை. ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட உணர்வோடு திரும்புகிறோம். உங்களுடைய வரவேற்பும் விருந்தோம்பலும், ஊக்கவுரைகளும் எங்களுக்கு மிகுந்த நிறைவையும் மகிழ்வை யும் தந்தது” என்று கூறிச் சென் றது நமக்கெல்லாம் நிறைவாக இருந்தது.
நிகழ்ச்சிக்கான அனைத்து பொருட்செலவையும் பகுத்தறி வாளர் கழகத் தலைமைக் கழக அமைப்பாளர் சி.மகேந்திரன் வெண்ணிலா இணையர்களும், முனைவர் வா.நேருவும், பாவலர் சுப.முருகானந்தமும் ஏற்று சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.