திராவிடர் கழகம் விழா எடுத்து நடத்துகிறது.
யாருக்காக?
சைவ மடாலயம் ஒன்றின் மடாதிபதியாக வாழ்ந்து மறைந்த ஒரு மடாதிபதிக்கு!
எதிரும் – புதிரும் இணைந்தது எவ்வாறு?
இணைத்தது எது?
மனிதநேயம் அன்றி வேறென்ன!
காரணம் கடவுளின் பெயரால் நடக்கும் அநியா யங்களை எதிர்த்தார் தந்தை பெரியார்.
“எனக்கென்ன கடவுள் மீது விரோதமா என்ன, அவரை நான் பார்த்தது கூட இல்லையே”என்றார் பெரியார்.
கடவுளின் பெயரால் ஏற்பட்ட அநியாயங்களை தட்டிக் கேட்டார் பெரியார்.
கடவுளை ஏற்றுக்கொண்டாலும் எந்தக் கடவுளும் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கவில்லை, அதை மனிதர்கள் தான் உருவாக்கினார்கள் என்று நிறைய மாற்றங்களை தான் சார்ந்த மடத்திற்குள்ளும் குன்றக்குடி கிராமத்திலும் உருவாக்கியவர் குன்றக்குடி அடிகளார்.
இந்த மனிதநேயம் தான் பெரியாரையும் குன்றக்குடி அடிகளாரையும் இணைத்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என குன்றக்குடி மடத்தில் இருந்தும் அழைப்பு வந்தது.
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தில் இருந்தும் அழைப்பு வந்தது எனக்கு. அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றேன்.
மகன் கைமுறிவாகி (fracture) இருப்பதால் குன்றக்குடி வர இயலா நிலை எனக்கு.எங்கும் செல்ல இயலா நிலை.
குன்றக்குடி மண்ணில் ஊன்றப்பட்ட விதை நான்.விருட்சமாய் இன்று நான் இருப்பதற்கு என் மண் தான் காரணம். அந்த மண்ணின் மகளாய், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக நிர்வாகிகள் யாவருக்கும், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் அனைவர்க்கும் எங்கள் கிராமத்தின் சார்பாக, எங்கள் குடும்பத்தின் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவர் அனுரத்னா
இணைய தளத்திலிருந்து…