ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள்: 11,558

viduthalai
1 Min Read

ரயில்வே துறையில் தொழில் நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப் பணியிடங்களுக்கு செப்.14 முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே துறையில் தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் தொழில் நுட்பம் சாராத பணியிடங்களுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை அலுவலா் பிரிவில் 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலா் பிரிவில் 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை பிரிவில் தலைமை பயணச் சீட்டு பரிசோதகர், நிலைய அதிகாரி, சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் – தட்டச்சர் மற்றும் முதுநிலை எழுத்தர் – தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு செப்.14 முதல் அக்.13 வரை விண்ணப் பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பிரிவில் பயணச் சீட்டு பரிசோதகர், கணக்கு எழுத்தர் – தட்டச்சர், இளநிலை எழுத்தர், பயிற்சி எழுத்தர் பணியிடங்களுக்கு செப்.21 முதல் அக்.20 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பிரிவுக்கு 18 முதல் 36 வயதுக்குள் உள்ளவர்களும், இளநிலை பிரிவுக்கு 18 முதல் 33 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் மேனாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினருக்கு ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் முதல்நிலை தோ்வில் பங்கேற்ற பின் திரும்ப செலுத்தப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *