கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு
சென்னை, செப்.4- தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளை ஞரணி, மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் சிங்காரவேலர் மாளிகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று (3.9.2024) மாலை 4 மணிக்கு திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. பொறி யியல் கல்லூரி திராவிட மாணவர் கழகம் மாநில அமைப்பாளர் வி.தங்கமணி வரவேற்றார்.
பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பிரச்சாரச் செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரைற்றினார்.
நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது நீட்டை எதிர்த்தார். ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார். இப்போது பிரதமரானதும்
ஆர்.எஸ்.எஸ்சின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முனைகிறார். தேசிய கல்வித்திட்டத்தில் அரசுப்பள்ளிகளை குருகுலப் பள்ளிகளுடன் இணைக்க வேண்டுமாம். ஒன்றிய அரசு திணிப்பது புதிய கல்வித் திட்டம் அல்ல அது. ஆர்.எஸ்.எஸ்.சின் வருணாசிரமத்தைப் புகுத்தும் திட்டம்.
1952–களிலேயே ராஜாஜி கொண்டு வந்தபோது தொழிற்கல்வி என்றுதான் சொன்னார். தந்தை பெரியார் தான் அத்திட்டத்தை குலக்கல்வித்திட்டம் என அடையாளம் காட்டி கடுமையாக எதிர்த்தார். அவர்களிடம் இல்லாத ஊடக பலமா? அதிகார பலமா? தந்தைபெரியார் அத்திட்டத்தை முறிய டித்ததைப்போலவே, இப்போதும் தேசிய கல்வி என்கிற பெயரால் குலக்கல்வியைத் திணிக்கின்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து முறி யடிப்போம்.
இங்கே ஹிந்தி மொழியைத் திணிக்கிறார்களே, உத்தரப்பிரதேசத்தில், குஜராத்தில் தமிழ் மொழியை கற்பிக்கிறார்களா? ஆக, இது ஓர் ஏமாற்று வேலை.
இங்கே தமிழ்நாட்டிலே சட்டப்பூர்வமாக இருப்பது இரண்டு மொழிதான். மாநில அரசு சட்டம் நிறைவேற்றியாயிற்று. ஒரு மாநில அரசு சட்டத்தில் கைவைக்க உரிமை எங்கே இருக்கிறது? இது என்ன சர்வாதிகாரமா?
ஒன்றிய பாஜக அரசின் கல்வித்திட்டத்தைத் தயாரித்தவர்களில் ஒரேயொரு ஆள்கூட கல்வியாளர் இல்லை. ஒன்றிய அரசின் செயலாளர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இவர்கள்தான் கல்வித்திட்டத்தை தயாரிக்கிறார்களாம். இது வருணாசிரமத்தின் தொடர்ச்சி! இதனை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.
இதைத் தமிழ்நாடுதான் முதலில் எதிர்க்கிறது. எதற்கெடுத் தாலும் தமிழ்நாடு எதிர்க்கிறதே என்கி றார்கள். எதிர்க்க வேண்டிய தைத்தான் எதிர்க்கிறோம். ஏனென்றால், இது தந்தை பெரியார் மண். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நம்முடைய குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்று கழகத் துணைத் தலைவர் கண்டன உரையில் குறிப்பிட்டார்.
வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் நன்றி கூறினார். துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
கலந்துகொண்டோர்
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், சாமி சமதர்மம், ச.ஆனந்தி, மோகன், எம்ஆர்எப் சேகர், ந.ராஜேந்திரன், சதீஷ், செல்வம், ராமாபுரம் ஜனார்த்தனன், தாம்பரம் இறைவி, மேடவாக்கம் அரங்க.ராஜா, செஞ்சி கதிரவன், வெண்ணிலா கதிரவன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், சரவணன், செல்வம், கொளத்தூர் ராஜேந்திரன், செம்பியம் கோபாலகிருஷ்ணன், காப்பாளர் கி.இராமலிங்கம், சி.வெற்றிச்செல்வி, பெரம்பலூர் வெங்கடேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், ச.சஞ்சய், சிறீதர், கரு.அண்ணாமலை, சின்மயாநகர் செல்வம். வி.தங்கமணி, ந.மணிதுரை, துரை.அருண், மு.பவானி, மு.இரா.மாணிக்கம், ஆவடி மாவட்டம் உடுமலை வடிவேல், பசும்பொன், பெரியார் மாணாக்கன், செ.பெ.தொண்டறம்.
வடசென்னை மாவட்டம்: துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கோ.தங்கமணி, தங்க.தனலெட்சுமி, ஆ.வெங்கடேசன், ஓட்டேரி பாஸ்கர், யுவராஜ், கலைமணி, பா.மணியம்மை, மகேஸ்வரன், மத்தூர் நிலவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.