தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
சென்னை, செப். 4- தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கு சிகிச்சையில் உள்ள தாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு அந்தப் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற் றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.
தமிழ்நாட்டில் நிகழாண்டில் 11,743 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 4 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணி கள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.
இது தொடா்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறிய தாவது:
மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நட வடிக்கைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட் டின் அனைத்து மாவட் டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிக ளில் 25,000 போ் ஈடுபடுத்தப் பட்டுள்ளனா்.
அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகா தார அலுவலரும், நகா்ப் புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக் களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு வீடுகள் தோறும் மருத்துவக் கண் காணிப்புப் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனை கள் மற்றும் சந்தேகங் களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனை களில் டெங்கு வார் டுகளையும், படுக்கை களையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்தி ருக்கவும், அவசரகால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றார் அவா்.