புரிந்துணர்வு கையெழுத்தான ஏழே நாட்களில் பணிகள் தொடக்கம்!
சேலம், செப். 4- சேலம் மாவட்டம் மேட்டூரில் அய்ந்தா யிரத்து 947 கோடி ரூபாயில் நீரேற்று புனல் மின் நிலையத்தை கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் அமைக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான ஏழே நாட்களில் இந்நிறுவனம் பணியை தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டின் பொருளாதா ரத்தை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி டாலருக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை யிலான திராவிட மாடல் அரசு செயல் பட்டு வருகிறது. இதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி நிறுவனங்களின் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 20 ஆயிரத்து 114 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை நிறுவ முன்வந்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கடந்த 21.8.2024 அன்று சென்னையில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்ட ஏழே நாட்களில் முதல்கட்ட பணிகளை கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதன்படி முதலாவது நீரேற்று புனல் மின் நிலையத்தை, சேலம் மாவட்டம் மேட்டூரில், அய்ந்தா யிரத்து 947 கோடி ரூபாயில் அமைக்க நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. பாலமலை மற்றும் நவிப்பட்டி கிராமங் களில் அமைக்கப்படவிருக்கும் இந்த நீரேற்று புனல் மின் நிலையத் திற்காக சுற்றுச் சூழல் அனுமதி கோரி கிரீன்கோ நிறுவனம் விண் ணப்பித்துள்ளது. முதல்கட்ட அனுமதி கிடைத்த தும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.