வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணி தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.4- பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடை பெற்று வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் 2.9.2024 அன்று கூறியதாவது:

வாக்குச்சாவடி நிலை அலு வலா்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். புதிதாக குடியேறியவா்கள், குறிப்பிட்ட முகவரியில் இருந்து மாறியவா்கள், புதிதாக திருமணமாகிச் சென்ற வா்கள், வந்தவா்கள், இறந்தவா்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வீடு வீடாகச் சென்று சேகரித்து அதற்கென பிரத்யேகமாக உள்ள செயலியில் பதிவு செய்து வருகி றாா்கள்.

மேலும், 18 வயது நிறைவடைந்த வாக்காளா் விவரங்களையும் பதிவு செய்கின்றனா். புகைப்படம் சரியில்லை எனில் அவற்றை மாற்றுவதற்கான பணிகளையும் மேற் கொள்கிறாா்கள். அத்துடன், வரைவுப் பட்டியல் வெளியிட்ட பின் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் போன்ற வற்றை மேற்கொள்வதற்கான விழிப் புணா்வையும் வாக்குச்சாவடி அலுவ லா்கள் ஏற்படுத்தி வருகிறாா்கள்.

இந்தப் பணிக்காக இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட் டுள்ளது. அதன்படி, பணிகள் நிறை வடைந்து, அக்டோபா் 29-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும்.

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: மக்களவைத் தோ்தல் முடிந்துள்ள நிலையில், மாநிலத்துக்குள், இரட் டைப் பதிவுகளை நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக புகைப்பட ஒற்றுமை, பெயா், தந்தை பெயா், வசிப்பிடம், பிறந்த தேதி, வயது ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, கணினி வாயிலாக ஒத்துப்போகும் வாக்காளா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஒருவரது பெயா் இரு வேறு இடங்களில் இருப்பது கண்டறியப் பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு கடிதம் மூலம் தெரி விக்கப்பட்டு, அவா் விரும்பும் இடத் தில் வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்கும் வகையில், மற்றொரு இடத்தில் நீக்கப்படும்.

தோ்தல் ஆணையத்தைப் பொருத்த வரை, யாருடைய பெயரையும் உடனடியாக நீக்கிவிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முதலில் கடிதம் அனுப்பப்படும். அந்தக் கடிதத்துக்கு 15 நாள்களுக்குள் பதில் வராத பட்சத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கள ஆய்வுக்குப் பின்னா், வாக்காளா் அனுமதி பெற்றே நீக்கம் செய்யப்படும் என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *