சென்னை, ஆக. 7 காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலை யில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என முரண்டு பிடித்த கருநாடக மாநில காங்கிரஸ் அரசு கடந்த சில நாட்களாக தண்ணீரை திறந்து விடுகிறது. தற்போது, அங்கு மழையும் பெய்து வருவ தால், காவிரியில் கூடுதல் தண் ணீரை திறந்து விடுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, காவிரி நீர் பங்கீட்டை கண் காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங் காற்று கூட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் குறிப் பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. அதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணித்து வரு கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட் டில் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்து விடாமல் கருநாடக மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வந்தது. தமிழ்நாட்டில், கடந்த ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களில் மட்டும் தர வேண்டிய மொத்த தண்ணீரில் 30 டிஎம்சி தண்ணீரை கரு நாடகம், தமிழ்நாட்டிற்கு தர வில்லை. அதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள் ளது.
இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 முறை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் மனு அளித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சியின் மாநில மான கருநாடக மாநில முதல மைச்சரிடம் பேசாமல், எப் போதும்போல பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட் டம் அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கியமாக காவிரி நீர் நிலுவை குறித்து தமிழ்நாடு குரல் எழுப்பும் என்பதால் கருநாடகம் காவிரியில் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது.
கருநாடக மாநிலத்தில் உள்ள கே. ஆர்.எஸ், மற்றும் கபினி அணைகளில் இருந்து ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட்டு உள் ளது. இன்று காலை நிலவரப் படி தமிழ்நாட்டிற்கு வினா டிக்கு 10,340 கனஅடி திறந்து உள்ளது.
இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகாரிக்கும் என்றும், கருநாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட் டம் வரும் 11ஆம் தேதி நடை பெற உள்ளதால், அதுவரை கருநாடக அரச தண்ணீர் திறக் கும் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரு கின்றனர்.
கருநாடக அணைகளை பொறுத்தவரை நேற்று (6.8.2023) கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.46 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 35.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினா டிக்கு 4,027 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினா டிக்கு 4,115 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையைப் பொறுத் தவரை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ள நிலை யில், அணையின் நீர் இருப்பு 18.91 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 4,366 கன அடி நீர் வந்து கொண்டு இருக் கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதி யில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட் டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட் டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.