ஊட்டி, செப்.3- உலக நாடுகள் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் பல்வேறு உள்ளன. அதில், குறிப்பாக பசுந் தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.35 ஆக்குவது, படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது போன்ற கோரிக்கைகள் உள்ளன.
கேரளா மாநிலங்களில் ரப்பர் பயன்படுத்தி போடப்பட்டிருக்கும் சாலைகளை போல், தமிழ்நாடு மலை மாவட்டங்களிலும் சாலை கள் அமைக்கப்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வயநாட்டில் நடந்த மிகப்பெ ரிய பேரிடரில் இருந்து இன்னும் எத்தனையோ பேர் மண்ணிலிருந்து மீட்கப்படவில்லை.
அந்த நிலை தமிழ்நாட்டில் ஒருபோதும் மலைவாழ் பகுதி களில் ஏற்படக் கூடாது. முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
முதலமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. இங்குதான் தொழில் செய்வதற்கு உகந்த இடம்.
கூட்டணிக் கட்சிகள்
அ.தி.மு.க.வின் ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை வெளிநாடு சென்ற தால் தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது என்கிறார். கொஞ்ச நாட்களாகவே அவர்கள் இருவரின் மத்தியில் என்ன பகை என்பது தெரி யாது. கொள்கை ரீதியான பகையா? வேறு ஏதாவது பகையா? ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. இந்தியா கூட்டணி, தேசத்திற்கு வழிகாட்டும் கூட்டணியாக உள்ளது. தி.மு.க. உடன் உள்ள கூட்டணிக் கட்சிகள் வேறு கட்சிக்குசெல்வதாக கூறப் படுவது வதந்தி.
– இவ்வாறு அவர் கூறினார்.