விவசாய நிலம் வாங்க பெண்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read

சென்னை, செப்.3- ஆதிதிரா விடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்க அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் பெறும் திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் நில உடைமை திட்டம்

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மகளிருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறது. அதாவது மகளிர் விடியல் பயணம் எனப்படும் குறிப்பிட்ட நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டம்,
மாதம் தோறும் ரூ.1,000 பெறும் வகையிலான மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற புதிய திட்டம் கடந்த நிதிநிலை அறிக்கையின்போது போது தமிழ்நாடு அரசால் அறி விக்கப்பட்டது.

ரூ.5 லட்சம் மானியம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) சார்பில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்கு விக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது அய்ந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறது.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்ப தாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பத்திரப்பதிவு இலவசம்

விண்ணப்பதாரருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கக்கூடாது, விண் ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் அவரது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ நிலத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப் படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட் டத்தில் வாங்கிய நிலத்தை இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. பயனாளிகள் வங்கி கடன் மூலமும் நிலம் வாங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவி டர். பழங்குடியின மகளிர், மாவட்டம் தோறும் செயல்பட்டு வகும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் பெறப்படுகிறது

இதுகுறித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறும்போது. இந்த திட்டத்துக்காக 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது மாவட்டம் தோறும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தகுதியான ஆதிதி ராவிட, பழங்குடியின மகளிர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *